இந்தியா

தோல்வியால் நான் ஓய்ந்துவிடவில்லை கட்சியை பலப்படுத்தும் சக்தி உள்ளது! தேவேகவுடா உருக்கம்

மக்களவைத் தேர்தல் தோல்வியால் நான் ஓய்ந்துவிட மாட்டேன். கட்சியை பலப்படுத்தும் சக்தி இன்னும் உள்ளது என தொண்டர்களிடையே மதசார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

தோல்வியால் நான் ஓய்ந்துவிடவில்லை கட்சியை பலப்படுத்தும் சக்தி உள்ளது!  தேவேகவுடா உருக்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடகாவில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் அதிக இடங்களை வென்றுள்ளது. போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஜனதா தளம் சார்பில் பாரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்துக் கொண்டு சிறப்புறையாற்றினர்.

அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,”மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள தேல்வியை நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம் அதற்கு அவசியம் இல்லை, கட்சியை பலப்படுத்தும் நோக்கத்திற்கு இணைந்து வேலை செய்யவேண்டும். கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் சேவை கட்சிக்கு தேவை என்பதால் ராஜினாமா செய்தவர்கள் கடிதத்தை வாபஸ் பெற்வேண்டும் என்று வழியுறுத்தினர்.

கூட்டணி மீது அவநம்பிக்கைக் கொள்ளவேண்டாம். மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றிப் பெற்றது அவரது தந்திரம் என நினைக்கவேண்டாம். நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். அதனை சவலாக எற்றுக்கொண்டு பணியைத் தீவிரப்படுத்துவோம். எனது உடல்நிலையை விட கட்சியை சரிசெய்வது தான் எனது முதல் வேலை. நமது கட்சியை பலப்படுத்துவதற்கு வயது முக்கியமல்ல, இந்த தேர்தல் தோல்வியால் நான் ஓய்ந்துவிட மாட்டேன். கட்சியை பலப்படுத்தும் சக்தி இன்னும் உள்ளது.” என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories