இந்தியா

ஸ்மார்ட் ரேசன் முறையில் ஏற்பட்ட குளறுபடி - உணவு பொருள் கிடைக்காமல் முதியவர் பட்டினி சாவு?

ஜார்கண்ட் மாநிலத்தில் 65 வயதான முதியவர் ஒருவர் உணவுகள் இல்லாமல் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் ரேசன் முறையில் ஏற்பட்ட குளறுபடி - உணவு பொருள் கிடைக்காமல் முதியவர் பட்டினி சாவு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜார்கண்ட் மாநிலத்தில், பயோ மெட்ரிக் ( கைரேகை) முறையில் மூலம் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. சமீபத்தில் அந்த பயோ மெட்ரிக் இயந்திரம் சில இடங்களில் செயல்படாமல் பழுதாகி போனதாக கிராம மக்கள் புகார் எழுப்பினர். ஆனால் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில் பயோமெட்ரிக் பழுது ஏற்பட்டு, உணவு பொருட்கள் கிடைக்காததால் 65 வயதான ராம்சரண் முண்டா என்பவர் பட்டினியால் உயிரிழந்துள்ளார்.

ராம்சரண் மரணம் குறித்து அவரது மகள் செய்தியாளர்களிடம் கூறுகையில்.” கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்கவில்லை. இயந்திரம் இயங்காததால் ரேசன் பொருட்கள் வழங்குவது நிறுத்துபட்டது. இதனால் வீட்டில் உணவு இல்லாத நிலைமையே இருந்தது. எனது தந்தை கடந்த நான்கு நாட்களாக எதையும் சாப்பிடவில்லை. அவர் உணவு இல்லாமல் பட்டினியால் இறந்துள்ளார்.” என்றார்.

இதற்கு அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிராம அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர் உணவு உண்ணாமல் இறந்துள்ளார் என இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆயுஷ்மன் பாரத் யோஜனா, ரேஷன் அட்டை, ஓய்வூதியம் போன்ற நலத்திட்டத்தை அவர் வாங்கியதாக கூறுகிறார். மேலும் இணைய இணைப்பு இந்த பகுதியில் இல்லாததால் தற்பொழுது நேரடியாக விநியோகம் செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.

பாதிக்கபட்ட குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதிஉதவி வழங்கவேண்டும் என அப்பகுதி சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories