இந்தியா

உயர் சமூகத்தினருக்கான 10% இடஒதுக்கீட்டை அவசரகதியில் அமல்படுத்த பாஜக அரசு திட்டம்! 

மருத்துவப்படிப்பில், உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு முதலே நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

உயர் சமூகத்தினருக்கான 10% இடஒதுக்கீட்டை அவசரகதியில் அமல்படுத்த பாஜக அரசு திட்டம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா, பாஜகவினர் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 25% கூடுதல் இடங்களை சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

எனவே, அனைத்து மாநில அரசுகளும், மருத்துவக் கல்லூரிகளில் 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய, ஜூன் 11ம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

10% இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கைவைக்க உச்சநீதிமன்றம் அணமையில் அனுமதி மறுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த புதிய முடிவை எடுத்து அவசர கதியில் முயற்சித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories