இந்தியா

தெலங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் 12 பேர் ஆளும் ராஷ்டிரிய சமிதியில் இணைய முடிவு!

தெலங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் 12 பேர் ஆளும் ராஷ்டிரிய சமிதியில் இணைய முடிவு செய்துள்ளனர். இது காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் 12 பேர் ஆளும் ராஷ்டிரிய சமிதியில் இணைய முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தெலங்கானாவில் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், ஆட்சியை கலைத்து, தேர்தலை சந்தித்தார்.

அதனையடுத்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7-ம் தேதி, தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 119 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பா.ஜ.க 2 இடங்களிலும் வெற்றி பெற்றுன. பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றுகொண்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் 12பேர் ஆளும் ராஷ்ட்ரிய சமிதியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி.ஆர்.எஸ்-சில் இணைத்துக் கொள்ளுமாறு 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகர் பி. ஸ்ரீநிவாச ரெட்டியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories