இந்தியா

வேத காலத்திலேயே கார்கள் தயாரிக்கப்பட்டு விட்டன - குஜராத் பாடப்புத்தகத்தில் சர்ச்சை !

ரிக் வேத காலத்திலேயே கார்கள் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், வியாசர் தான் ஸ்டெம்செல் கண்டுபிடிக்க காரணமென்றும் சர்ச்சையான கருத்துகள் குஜராத் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

வேத காலத்திலேயே கார்கள் தயாரிக்கப்பட்டு விட்டன - குஜராத் பாடப்புத்தகத்தில் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஸ்டெம்செல் மற்றும் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தைகளை உருவாக்கும் விஞ்ஞானம் பல லட்சங்களுக்கு ஆண்டுகளுக்கு முன்பாக மகாபாரத காலத்திலேயே இருந்ததாக குஜராத் பாடப்புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநில பள்ளி மாணவர்களுக்கு துணைப்பாட நூல்கள் என்கிற தலைப்பில் 8 பாடப்புத்தகங்கள் இந்த ஆண்டு வழங்கப்பட்டு உள்ளன. அதில் உள்ள ஒரு பாடத்தில், “ஸ்டெம்செல் முறையைக் கண்டுபிடித்ததாக அமெரிக்கா சொல்லி வருகிறது. ஆனால், உண்மையில் டாக்டர் பாலகிருஷ்ண கணபதி மதாபுர்கர் என்பவர் ஸ்டெம்செல் மூலம் உடல்பாகங்களை மீண்டும் உருவாக்க காப்புரிமை பெற்றுள்ளார். ஆனால், ஸ்டெம்செல் குறித்த சிந்தனை மகாபாரதத்தில் இருந்து தான் மதாபுர்கர்க்கு கிடைத்தது" என்று கூறப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் குந்திக்கு குழந்தை பிறந்தபோது , காந்தாரிக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. அதன் பிறகு கருவுற்ற காந்தாரி கோபத்தினால் கருச்சிதைவு செய்து கொண்டாள். அவள் கருவிலிருந்து ஒரு பெரிய பிண்டம் வெளிப்பட்டது. வியாச முனிவர், அந்த பிண்டத்தை ஒரு தொட்டியில் வைத்து சில மருந்துகள் மூலம் காப்பாற்றினார். பின்னர், அந்த பிண்டத்தை நூறாக பிரித்து 100 நெய்குடங்களில் தனித்தனியாக வைத்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு, அதிலிருந்து துரியோதனன் உள்ளிட்ட 100 கவுரவர்கள் உருவாகினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆட்டோமொபைல் தொழில்நுட்பமும் வேத காலத்தலிருந்தே உள்ளது. மோட்டார் கார்களை அப்போது அனஷ்வா ரதம் என்று அப்போது அழைத்து வந்துள்ளனர். பொதுவாக ரதம் என்றால், குதிரைகள் பூட்டப்பட்டாகும். அனால், அனஷ்வா ரதம் குதிரைகளின்றி இயங்கக் கூடியதாகும். இது இயந்திர ரதமாகும், இது தான் தற்போதைய மோட்டார் கார். ரிக் வேதத்திலியே இது இருக்கிறது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், "மகாத்மா காந்தி 1948ம் ஆண்டு, அக்டோபர் 30ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மறைவின் போது இஸ்லாமிக் இஸ்லாம்மத் என ஒரு நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்கா மீது ஜப்பான் அணுகுண்டு தாக்குதல் நடத்தியது" என்று தவறான தகவல்களை மாணவர்களிடத்தில் துணைப்பாடநூல் என்கிற பெயரில் தந்துள்ளனர்.

இந்த புத்தகங்கள் அனைத்தும் வித்யா பாரதி என்னும் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் கல்வி அமைப்பின் உறுப்பினரான தீனநாத் பந்த்ரா தான் தொகுத்துள்ளார். இந்த தொகுப்பிற்கு "மேற்கத்திய வண்ணம் பூசப்பட்ட, இந்திய சரித்திரத்தின் உண்மைகள்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மாதிரியான தவறான தகவல்களால் மாணவர்களின் அறிவியல் சிந்தனை முடங்கிவிடும் என கல்வியிலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய குஜராத் கல்வியமைச்சர் புபேந்திரசிங் சுதாசமா "இவை பாட திட்டத்தில் உள்ள புத்தகங்கள் அல்ல. புராணங்களை குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றார். மேலும், இரண்டாம் உலகப்போர் குறித்தும்,காந்தி சுடப்பட்ட குறித்த செய்தியும் அச்சடிப்பில் தவறு ஏற்பட்டுள்ளது. திருத்தி வெளியிட்டுள்ளோம்" என்றார்.

banner

Related Stories

Related Stories