இந்தியா

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை வென்ற காங். :பாஜக வெற்றியில் வலுக்கும் சந்தேகம்

கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகப்படியான இடங்களை வென்று மகத்தான வெற்றியை பெற்றது.

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை வென்ற காங். :பாஜக வெற்றியில் வலுக்கும் சந்தேகம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிகப்படியான இடங்களை வென்று மகத்தான வெற்றியை பெற்றது. இந்த இருகட்சிகளும் தனித் தனியே உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தன.

கர்நாடகாவில் மே 29ம் தேதி 61 நகர்ப்புற அமைப்புகளில் இருக்கும் 1,221 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் 509 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. அடுத்ததாக பாஜக 366 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 174 இடங்களையும், சுயேட்சைகள் 160 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் இருக்கும் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள 25 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

“உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருப்பதைக் காட்டுகிறது” என்று அக்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர். கர்நாடக காங்கிரஸும், “காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தமைக்கு கர்நாடக மக்களுக்கு நன்றி. உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நாங்கள் நடந்து கொள்வோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள பெரிய வெற்றி, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என சமூக வலைதளங்களில் பலர் கேள்வியெழுப்பி உள்ளனர்.

banner

Related Stories

Related Stories