இந்தியா

மீண்டும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசு : புதிய கல்விக்கொள்கையில் வில்லங்கம் 

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவுகளில், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. 

மீண்டும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசு : புதிய கல்விக்கொள்கையில் வில்லங்கம் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசு நேற்று புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவுகளை வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியைக் கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தற்போது உள்ள தேசிய கல்வி கொள்கை. இந்தக் கல்வி முறை 1992ம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014ம் ஆண்டு பா.ஜ.க அதன் தேர்தல் அறிக்கையில் புதிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டு என அறிவித்திருந்தது. அதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்தது.

அந்த குழு தற்பொழுது மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற ஒருவாரத்தில் தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பதவியேற்ற மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்றைய தினம் வழங்கியுள்ளது.

அந்த வரைவுரையில், "தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது, தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை கட்டுப்படுத்துவது, இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை கட்டாயப்படமாகக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த புதிய வரைவில் மும்மொழி கொள்கை என்பது கட்டாயம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசு : புதிய கல்விக்கொள்கையில் வில்லங்கம் 

அதன்படி, இந்தியாவில் இந்தி மொழி பேசும் மாநிலங்கள், இந்தி மொழி பேசாத மாநிலம் என இரண்டாக பிரித்துள்ளது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை கறக்க கல்வி நிலையங்களில் மாநில தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கைக்கான வரைவு குறித்து பொதுமக்கள், ஜூன் 30 ஆம் தேதி வரை தங்கள் கருத்துக்களை nep.edu@nic.in என்ற இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையால் மீண்டும் இந்தி மொழியை திணிக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோடி அரசு பொறுப்பேற்ற முதல் நாளே மக்கள் விரோத திட்டத்தை கொண்டுவர ஆயத்தமாகியுள்ளது.

விருப்பம் இல்லாமல் மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி எடுத்தால் தமிழகம் இந்தி பேசாத மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை துவங்கும் என்று தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1961ல் வகுக்கப்பட்ட மும்மொழிக்கொள்கையை அன்றைய முதல்வர் அண்ணா 1968ல் திருத்தம் செய்து, இரு மொழிக்கொள்கையாக மாற்றினார். அதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். இந்தி வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால், இன்று மத்திய அரசு கல்வியை மாநில பட்டியலில் இருந்து எடுத்து மத்திய பட்டியலில் வைத்துக்கொண்டு மீண்டும் மும்மொழிக்கொள்கையைக் கொண்டு வந்து இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைப் புகுத்தப் பார்க்கிறது. இது பெரும் விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும்.

banner

Related Stories

Related Stories