இந்தியா

மொழிவாரியாக மக்களை பிரித்தாள முயற்சிக்கிறது பாஜக - மம்தா பானர்ஜி சாடல்! 

நாட்டு மக்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக கையாண்டு வருகிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.

மொழிவாரியாக மக்களை பிரித்தாள முயற்சிக்கிறது பாஜக - மம்தா பானர்ஜி சாடல்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் இணைந்து புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்த நிலையில், பாஜக வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே ஆங்காங்கே சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறை தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி எனும் மதவாத சக்தியை ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும், அவர்கள் மொழியின் அடிப்படையில் மக்களை பிரித்தாள முயற்சித்து வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றிக்கிட்டாததை அடுத்து நேற்று நைஹட்டியில் அக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories