
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளது. ஆதலால், மோடியே மீண்டும் பிரதமராக உள்ளார்.
இதனையடுத்து, நாளை மாலை 7 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவு காரணமாக பொது நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார்.
எனவே, உடல்நலத்தை கவனிக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், நாளை அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தனக்கு எந்த இடமும் வழங்க வேண்டாம் என மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ஏற்கெனவே, வாய்மொழியாக மோடியிடம் தெரிவித்திருந்ததாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.








