இந்தியா

“முஸ்லிமுக்கு இங்க என்ன வேலை... பாகிஸ்தானுக்குப் போ..” : பீகாரில் ஆர்.எஸ்.எஸ் அட்டூழியம் !

பீகார் மாநிலத்தில் செரியா மாவட்டத்தில் உள்ள பாரிபூர் என்ற இடத்தில் இஸ்லாமிய இளைஞர் மீது ஆர்.எஸ்.எஸ் துப்பாக்கிச் சூடு நடத்திய கொடூரம் அரங்கேறியுள்ளது.

“முஸ்லிமுக்கு இங்க என்ன வேலை... பாகிஸ்தானுக்குப் போ..” : பீகாரில் ஆர்.எஸ்.எஸ் அட்டூழியம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீகார் மாநிலத்தின் பாரிபூர் பகுதியில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை வழிமறித்து உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டபின் அவரை துப்பாக்கியால் சுட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பரவப்பட்டு வருகிறது.

இந்த சம்பம் குறித்து பாரிபூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்பொழுதுவரை யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

முகமது யாசிம் என்கிற இஸ்லாமிய இளைஞர். பாரிபூரில் உள்ள ஒரு கடையில் சோப்பு விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சோப்பு பொருட்களை விற்பனை செய்வதற்கு செரியா மாவட்டத்தில் கும்பி கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியின் பஞ்சாயத்து தலைவர் ராஜீவ் யாதவ் என்பவர் யாசிம்மை வழிமறித்துள்ளார். இவர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் என்று கூறப்படுகிறது. அப்போது ராஜீவ் உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டுள்ளார். இவர் தன்னுடைடைய பெயர் முகமது யாசின் என தெரிவித்துள்ளார். உடனே ராஜீவ் "நீ முஸ்லீம் நீ என் இங்கு இருக்கிறாய், பாகிஸ்தானுக்கு ஓடிவிடு” என்று யாஷிமை மிரட்டியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் போது ராஜீவ் குடித்துவிட்டு தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ராஜீவ் இஸ்லாமிய இளைஞரை தாக்கியுள்ளார். பின்னர், அந்த இளைஞரை ராஜீவ் யாதவ் முதுகில் சுட்டுவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். உதவிக்கு யாரும் வராத நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரே அடிபட்ட காயத்துடன் பாரிபூர், கும்பி கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் காவல்துறையினர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிகிக்சை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த சம்பம் குறித்தது விசாரணை நடைபெறுவதாகவும், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பம் குறித்து பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் பேசும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்று ஒருவார காலம் கூட ஆகவில்லை. ஆனால், சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்துவிட்டது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பாரிபூர் தொகுதி பா.ஜ.க தொகுதி என்பது குறிபிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories