இந்தியா

ஸ்டாலினைப் போல வலுவான கூட்டணியை உருவாக்க மற்ற மாநில எதிர்கட்சிகள் தவறிவிட்டன - டி.ராஜா

தேர்தல் முடிவுகள் குறித்து மே 27 மற்றும் 28 தேதிகளில் தேசிய செயற்குழு கூட்டி விவாதிக்க உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

ஸ்டாலினைப் போல வலுவான கூட்டணியை உருவாக்க மற்ற மாநில எதிர்கட்சிகள் தவறிவிட்டன - டி.ராஜா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது பா.ஜ.க. தமிழகம் மற்றும் ஆந்திராவைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ”தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போன்று ஒரு வலுவான மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன” என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசுகளின் கொள்கைகளும் தேவைகளையும் மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு எதிரான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை இனிமேலும் பாஜக அரசு தொடராமல் இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வருகிற மே 27 & 28 தேதிகளில் கூடவுள்ளது என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories