இந்தியா

தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம்? 15 மணிநேரம் காத்திருக்கவேண்டும்! -தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் சுமார் 15 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம்? 15 மணிநேரம் காத்திருக்கவேண்டும்! -தேர்தல் ஆணையம் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி நடைபெற்ற வாக்குப்பதிவில் அதிக முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. எனவே 50% விவிபாட் இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ண வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

இது குறித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், ஒவ்வொரு தொகுதியிலும் 5 விவிபாட் இயந்திரங்களை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஒரு விவிபாட் இயந்திரத்தை எண்ணி முடிக்க ஒரு மணிநேரம் ஆகும் என்கிறது தேர்தல் ஆணையம்.

5 விவிபாட் இயந்திரங்களின் வாக்குகள் எண்ண வேண்டும் என்பதால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முடிவுகளுக்கு சுமார் 15 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. முன்னணி நிலவரங்கள் சுற்றுவாரியாக தெரியவந்தாலும், முடிவுகளை அறிவிக்க இரவு பத்து மணி ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

விவிபாட் வாக்கு எண்ணிக்கைக்கு இந்திய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின் பொறுப்பாளராக இருப்பார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories