இந்தியா

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விரலில் அடையாள மை வைப்பு; வாரணாசியில் பா.ஜ.கவினர் அராஜகம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விரலில் மை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விரலில் அடையாள மை வைப்பு; வாரணாசியில் பா.ஜ.கவினர் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7ம் கட்ட மற்றும் கடைசிகட்ட வாக்குப்பதிவு இன்று 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, காலை முதலே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், சாந்தலியில் உள்ள தாரா ஜிவான்புர் என்ற கிராமத்தில், வாக்களர்களுக்கு நேற்றே விரலில் மை வைத்துவிட்டு, அவர்களிடம் தலா, ரூ.500-ஐ அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய வாக்காளர்கள் மூவர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் வந்து, எங்கள் விரலில் மை வைத்துவிட்டு பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்க முடியாது என்று மிரட்டினார்கள் என்றனர்.

தேர்தலுக்கு முந்தைய நாள் இதுபோன்று சம்பவம் நடந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories