இந்தியா

தேர்தலுக்காக டெல்லியில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்திய மெட்ரோ நிர்வாகம்!

6ம் கட்ட தேர்தல் மே 12ம் தேதி அன்று, நடைபெறுகிறது. நாட்டின் தலைநகரான டெல்லிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக மெட்ரோ நிர்வாகம் சிறப்பு வசதிகளை செய்துள்ளது.

தேர்தலுக்காக டெல்லியில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்திய மெட்ரோ நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக மே 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு மக்களும், தேர்தல் அதிகாரிகளும் சிரமத்தை மேற்கொள்ளக் கூடாது என்பதற்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்குவது வழக்கம். ஆனால் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அன்று மட்டும் 2 மணிநேரத்துக்கு முன்பு அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகள் குறித்த நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த வசதியை செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம். மேலும் மே 12ம் தேதி மட்டுமே இந்த வசதி என்றும், அதற்கு பின்னர் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும்

banner

Related Stories

Related Stories