இந்தியா

நியாயமாக தேர்தல் நடைபெற விடாமல் பா.ஜ.க குறுக்கே நிற்கிறது : 21 கட்சிகள் மனு!

நியாயமாக தேர்தல் நடைபெற விடாமல் பா.ஜ.க குறுக்கே நிற்கிறது : 21 கட்சிகள் மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

50% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (VVPAT) சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் அளித்த மறுசீராய்வு மனுவை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு, ஃபரூக் அப்துல்லா, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட 21 கட்சிப் பிரதிநிதிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு அளித்து 50% ஒப்புகை சீட்டு இயந்திரங்களை எண்ண வலியுறுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், "நாங்கள் வெளிப்படைத்தன்மைக்காகப் போராடி வருகிறோம். நியாயமாகத் தேர்தல் நடக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை. ஆனால், பா.ஜ.க எங்கள் நியாயமான கோரிக்கைக்கு எதிராக நிற்கிறது" என்றனர்.

மேலும், தேர்வு செய்யப்படும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அல்லது விவிபாட்-டில் ஏதாவது ஒன்றில் முரண்பாடு காணப்பட்டாலும், சட்டப்பேரவையின் எல்லா வாக்குச்சாவடிகளின் இயந்திரங்களிலும் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரப்போவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories