இந்தியா

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் மனு தள்ளுபடி!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு விசாரணை குழு தள்ளுபடி செய்தது.

Ranjan Gogoi
Ranjan Gogoi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்த 35 வயது பெண் ஒருவர் பாலியல் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ரஞ்சன் கோகாய், சில முக்கிய வழக்குகளை கையாளவிருப்பதால் இது போல குற்றச்சாட்டுகள் எழுவதாகத் தெரிவித்திருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதே பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்து விசாரிக்க, நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டார் தலைமை நீதிபதி.

இதற்கிடையே இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்கவைக்க சதி நடப்பதாகவும், தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புகார் குறித்து நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு முன் மூடப்பட்ட தனி அறையில் ரஞ்சன் கோகாய் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு விசாரணை குழு பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது.

banner

Related Stories

Related Stories