இந்தியா

மதவாத வெறுப்பரசியலை எதிர்த்து ஒன்றிணையவேண்டும் - டெல்லியில் பிரகாஷ்ராஜ் பிரசாரம்!

“மதவாத வெறுப்பரசியலை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்து டெல்லியில் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

மதவாத வெறுப்பரசியலை எதிர்த்து ஒன்றிணையவேண்டும்  - டெல்லியில் பிரகாஷ்ராஜ் பிரசாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு பிரசாரம் செய்வதாக அறிவித்துள்ளார். பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

டெல்லி மக்களுக்கு தேவையான நல்ல சுகாதாரம், கல்வி ஆகியவற்றை குறிக்கோளாக வைத்து இந்த தேர்தலை சந்திக்கும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளை ஆதரித்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

மதவாத அரசின் வெறுப்பு அரசியலை எதிர்த்து போராடுவதற்கு மாற்று சிந்தனை கொண்ட ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories