இந்தியா

வாக்குக்காக ராணுவத்தின் பின்னால் மோடி ஒளிந்துகொள்கிறார் - மன்மோகன் சிங் சாடல்

காங்கிரஸ் ஆட்சியின் போதும், 6 முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை நாங்கள் ஓட்டுக்காக பயன்படுத்த நினைத்ததில்லை என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

வாக்குக்காக ராணுவத்தின் பின்னால் மோடி ஒளிந்துகொள்கிறார் - மன்மோகன் சிங் சாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில் அவர் பேசியதாவது,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ் கூட்டணி) ஆட்சியில் இருந்த போதும், தீவிரவாதிகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதனை ஒரு போதும், காங்கிரஸாரும், அரசும் வாக்குக்காக பயன்படுத்தியதும் இல்லை, அதனை வெளிப்படுத்திக்கொண்டதும் இல்லை.

ஆனால், 2016ல் நடந்த துல்லியத் தாக்குதலையும், சமீபத்தில் பாலகோட்டில் நடந்த விமானப் படை தாக்குதலையும் தற்போது பிரதமராக உள்ள மோடி தேர்தல் பிரசாரத்தின் போது பேசி வருவது வெட்கக்கேடான செயல் என மன்மோகன் சிங் சாடியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பொறுத்தவரை ராணுவ நடவடிக்கைகளை நாட்டிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே நடத்தப்பட்டது என்றார்.

கடந்த 70 ஆண்டுகளில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த எந்த அரசும் ராணுவத்தின் பின்னால் ஒளிந்துகொண்டதில்லை. ஆனால், பாஜகவின் அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கையை மறைப்பதற்காக இந்தியாவின் வீரமிக்க பாதுகாப்பு படைகளை தேர்தலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்திக்கொண்டு அதன் பின்னால் ஒளிந்துகொள்வது வெட்கக் கேடான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories