இந்தியா

ரஃபேல் ஒப்பந்த முறைகேடு: சீராய்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

ரஃபேல் ஒப்பந்த முறைகேடு: சீராய்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என கடந்த ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தொடரப்பட்டிருந்தது. இந்த சீராய்வு மனுக்களுடன் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், சீராய்வு மனுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என மத்திய சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்நிலையில், சீராய்வு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுக்கு வந்த போது, சீராய்வு மனு தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு 4 வாரங்கள் அவகாசம் கேட்டது.

அதற்கு மறுப்பு தெரிவித்து மே 6-ம் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். நாடாளுமன்றத் தேர்தலின் 5-ம் கட்ட தேர்தல் வருகிற மே 6 அன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories