இந்தியா

மக்களவைத் தேர்தல்: 72 தொகுதிகளில் நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு

மொத்தம் 943 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 72 தொகுதிகளுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலையோடு ஓய்ந்தது

மக்களவைத் தேர்தல்: 72 தொகுதிகளில் நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவைத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. 9 மாநிலங்களைச் சேர்ந்த 72 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. மொத்தம் 943 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 72 தொகுதிகளுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலையோடு ஓய்ந்தது. நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர்.

பீகார் ( 5), ஜம்மு காஷ்மீர்(1), ஜார்கண்ட் (3), மத்திய பிரதேசம் (6), மஹாராஷ்டிரா (17), ஒடிசா ( 6), ராஜஸ்தான் (13), உத்தர பிரதேசம் (13), மேற்குவங்கம்(8) என மொத்தம் 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கின்றன.

பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க வேட்பாளராக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் போட்டியிடுவதால், இந்த தொகுதியின் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளின் போரட்டங்கள் அதிகம் உள்ள பண்டல்கண்ட் பகுதி வாக்குப்பதிவும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories