இந்தியா

மோடிக்காக கழுவப்பட்ட சாலைகள் - 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் வீண்!

தான் வெற்றி பெறுவதற்காக வாரணாசியின் ஒட்டுமொத்த மக்களையும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறார் மோடி.

மோடிக்காக கழுவப்பட்ட சாலைகள் - 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் வீண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரதமர் மோடி தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நேற்று பேரணி ஒன்றை நடத்தினார். அதற்காக சாலையைக் கழுவிச் சுத்தம் செய்வதற்காக 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் செலவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வாரணாசியில் நேற்று பேரணியை மேற்கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர் கலந்து கொண்டனர். தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோரும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

மோடி கலந்துகொள்ளும் பேரணிக்காக நகரை சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வாரணாசி சாலைகள் குடிநீரைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுளன. இதனால் வாரணாசியில் சுமார் 30% மக்கள் குடிநீர் தண்ணீர் இல்லாமல் அவதியுறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாரணாசி மாநகராட்சியின் 40 தண்ணீர் டேங்கர்கள், 400 பணியாளர்கள் இந்தப் பணிக்காக இரவுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தான் வெற்றி பெறுவதற்காக ஒட்டுமொத்த மக்களையும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறார் மோடி.

banner

Related Stories

Related Stories