இந்தியா

3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - சராசரியாக 63% வாக்குப்பதிவு!

116 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சராசரியாக 65% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Voters
Voters
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டுகட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாவது கட்டமாக உத்தர பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

116 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 63.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 79.36% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள ஜம்மு காஷ்மீரில் 12.86% வாக்குகளே பதிவாகியுள்ளன. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Polling
Polling

மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு பின்வருமாறு :

ஒடிசா - 58.18%

திரிபுரா - 78.52%

உத்தர பிரதேசம் - 57.74%

மேற்கு வங்கம் - 79.36%

சத்தீஸ்கர் - 65.91%

தாத்ரா & நாகர் ஹவேளி - 71.43%

டாமன் & டையூ - 65.34%

அசாம் - 78.29%

பீகார் - 59.97%

கோவா - 71.09%

குஜராத் - 60.21%

ஜம்மு காஷ்மீர் - 12.86%

கர்நாடகா - 64.14%

கேரளா - 70.21%

மகாராஷ்டிரா - 56.57%

banner

Related Stories

Related Stories