இந்தியா

குஜராத் கலவரம் : பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குஜராத் அரசு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு 

குஜராத் கோத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு. 

குஜராத் கலவரம் :   பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குஜராத் அரசு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 10–க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இவ்விவகாரத்தில் குஜராத் மாநில அரசு வழங்கிய நிதியுதவி ரூ. 5 லட்சத்தை ஏற்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு சென்று கூடுதல் நிவாரணம் கோரினார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். அவரது குழந்தையை அடித்துக்கொன்றிருக்கிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு இரண்டு வாரத்துக்குள் குஜராத் அரசு 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அந்த பெண் விரும்பும் இடத்தில் அவருக்கு அரசு வீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories