இந்தியா

விளம்பரத்திற்காக கோடிகளை செலவழிக்கும் பிரதமர் மோடி-மாயாவதி தாக்கு 

விளம்பரத்திற்காக பிரதமர் மோடி ரூ.3,044 கோடி செலவு செய்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

modi & mayavati
internet modi & mayavati
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் களம் காண தயாராகி வருகின்றனர். இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை (80) கொண்ட மாநிலமாக கருதப்படும் உத்தரபிரதேசத்தில், தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, விளம்பரத்திற்காக பிரதமர் மோடி ரூ.3,044 கோடியை செலவழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "விளம்பரத்திற்காக ரூ.3044 கோடியை செலவு செய்துள்ள மோடி, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் கல்வி மற்றும் மருத்துவம் சென்றடையும் வகையில் பொதுமக்கள் பணம் உபயோகிக்கப்பட வேண்டும். ஆனால், பாஜக அரசாங்கமோ பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் விளம்பரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது.பாஜக கட்சி வறுமை மற்றும் வேலையின்மை போன்ற சிக்கல்களிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப தேர்தல் விவாதங்களை தவிர்த்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்" எனக் கூறினார்

banner

Related Stories

Related Stories