திமுக அரசு

10 ஆண்டுகளில் இல்லாத நேர்மை; வெளிப்படையான நிர்வாகத்துக்கு இதுதான் சான்று - திமுக அரசுக்கு மக்கள் பாராட்டு

பொது நிவாரண நிதிக்கு அனுப்பிய நிதிக்கான ரசீதை தி.மு.க. அரசு அனுப்பியதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

10 ஆண்டுகளில் இல்லாத நேர்மை; வெளிப்படையான நிர்வாகத்துக்கு இதுதான் சான்று - திமுக அரசுக்கு மக்கள் பாராட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அரசு அமைந்த போது பெருந்தொற்றான கொரோனாவின் இரண்டாவது அலை என்ற மிகப்பெரிய சவால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வந்திருந்தது.

ஆனால் முதலமைச்சரோ மருத்துவர், விஞ்ஞானிகள், அதிகாரிகள், மக்கள் என அனைவரது ஆலோசனையோடும் ஒத்துழைப்போடும் சாதுர்யமாக செயல்பட்டு இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

அந்த கொரோனா தடுப்புப் பணிகளில் முக்கிய பங்காக நிவாரண நிதி இடம்பெற்றது. பொது நிவாரண நிதிக்கு வரும் நிதிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடனேயே பொதுவெளியில் தெரிவிக்கப்படும்.

10 ஆண்டுகளில் இல்லாத நேர்மை; வெளிப்படையான நிர்வாகத்துக்கு இதுதான் சான்று - திமுக அரசுக்கு மக்கள் பாராட்டு

சிறு, குறு, பெரு நிறுவனங்கள் தங்களால் இயன்றதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பலாம் என்றும் அரசுக்கு அனுப்பியதற்கான ரசீதையும் இணையம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாடு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தமிழர்கள், தொழிலதிபர்கள் என பலரும் நிவாரண நிதியை அனுப்பியதோடு அதற்கான ரசீதையும் முறையாக பெற்றிருக்கிறார்கள்.

அவ்வகையில், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த மருந்து நிறுவனம் அனுப்பிய நிதிக்கான தமிழ்நாடு அரசின் ரசீது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

இந்த ரசீது முறை கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இல்லாதது குறித்தும் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலிம் தலைமையிலான அரசு முழுமையாக வெளிப்படையாக செயல்படுத்துவதையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories