திமுக அரசு

“உதயசூரியன் ஒளியுடன் தமிழ்நாட்டுக்கு விடிவுபிறந்தது”:முதல்வராகவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து!

முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார் வைகோ.

“உதயசூரியன் ஒளியுடன் தமிழ்நாட்டுக்கு விடிவுபிறந்தது”:முதல்வராகவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகின்றனர்.

தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், வெற்றி பெற வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும், முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் அறிக்கை விடுத்துள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

“திராவிட இயக்கத்தை, நம் அன்னைத் தமிழைக் கப்பி இருந்த காரிருள் நீங்கி, உதயசூரியன் ஒளியுடன் தமிழ்நாட்டுக்கு விடிவு பிறந்து உள்ளது.

வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு, தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற முழக்கம் விண் அதிர எங்கும் எதிரொலிக்கின்றது.

வெற்றியைத் தவிர வேறு இல்லை என்று, திராவிட இயக்க உணர்வாளர்கள் பூரித்து மகிழ்கின்றனர்.

அன்புச் சகோதரர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சி மலர்கின்ற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ்கின்றேன்.

வெற்றிகள் தொடரட்டும்; பணிகள் தொடங்கட்டும்; தொடர்ந்து நிகழட்டும்; புதிய வரலாறு படைக்கட்டும் என இந்தப் பொன்னான வேளையில், என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதுணையாக இருக்கும்.

ஆட்சி மாற்றத்திற்கு வாக்கு அளித்த. தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories