திமுக அரசு

உடைந்த காலால் வாங்கிய உதை எப்படி வலிக்கும் தெரியுமா? : மோடி, அமித்ஷா அனுபவம் பகிர்வார்களா ?

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

உடைந்த காலால் வாங்கிய உதை எப்படி வலிக்கும் தெரியுமா? : மோடி, அமித்ஷா அனுபவம் பகிர்வார்களா ?
pc
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி மற்றும் பா.ஜ.க கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

294 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சியமைக்க, 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆளும் திரிணமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 88 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3-வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக வாய்ப்பு உள்ளது.

மேற்கு வங்கத்தில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என 8 கட்டங்களாக தேர்தலை நடத்தியதில் தொடங்கி, பிரச்சாரத்தின் போதும், வாக்குப்பதிவின் போதும் கலவரத்தை ஏற்படுத்திய பா.ஜ.கவிற்கு இந்த பின்னடைவு பலத்த அடியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories