திமுக அரசு

‘ஓட்டுப்போடலைன்னா செத்துப்போயிடுவேன்’: பழனிசாமி பாணியில் மிரட்டல் உத்தியை கையிலெடுத்த அமைச்சரின் IT விங்!

தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றால் உயிரை விட்டுவிடுவேன் எனக்கூறும் தொனியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் பரப்பப்பட்ட போஸ்டர் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

‘ஓட்டுப்போடலைன்னா செத்துப்போயிடுவேன்’: பழனிசாமி பாணியில் மிரட்டல் உத்தியை கையிலெடுத்த அமைச்சரின் IT விங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆட்சியில் இருந்த பத்தாண்டு காலத்தில் மக்களுக்கு நன்மை செய்யாத அ.தி.மு.க அமைச்சர்கள் தேர்தல் நேரத்தில் மக்களிடம் கண்ணீர் நாடகமாடி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடைசி கட்ட முயற்சியாக மக்களிடம் கெஞ்சி ஓட்டுக் கேட்கும் நிலைக்குச் சென்றுள்ளனர்.

அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட பலரும் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணீர் மல்க வாக்கு கேட்டு வருகின்றனர்.

விஜயபாஸ்கர் பிரசாரம் செய்யும்போது, “எனக்கு சுகர் இருக்கு, பி.பி. இருக்கு.. மயக்கம் வருது.. எனக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் இந்த விராலிமலையை இயேசுநாதர் போல தோளில் சுமந்து வருகிறேன்” எனப் பேசி வாக்குக்காக மக்களிடம் கெஞ்சி வந்தார்.

இந்நிலையில், விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவரது ஐ.டி.விங் சார்பாக பரப்பப்படும் போஸ்டரில், ‘வெற்றிபெறச் செய்யவில்லை என்றால் உயிரை விட்டுவிடுவேன்’ என மிரட்டல் விடுக்கும் தொனியிலான வாசகம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில், “வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டு கேட்பவர்களே தோல்வியடைந்தால் உயிரை விட்டு விடுவேன் என கூறும்போது 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு, பகல் பாராமல் ஒவ்வொரு கஷ்ட காலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும்? முடிவு உங்கள் கையில்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சிக்காலத்தில் தொகுதி மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் தோல்வி பயத்தில், இப்படி தற்கொலை மிரட்டல் விடுத்திருப்பது மக்களிடையே கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories