தேர்தல்2021

“வெல்லம் விற்றவரும், டீ விற்றவரும் கூட்டு சேர்ந்து நாட்டை விற்கப்போகிறார்கள்” - விளாசும் பஞ்சாப் விவசாயி!

“வெல்லம் விற்ற விவசாயி ஒருவரும், டீ விற்றவரும் கூட்டணி அமைத்துள்ளனர். இருவரும் சேர்ந்து நாட்டை விற்று விடுவார்கள்.” என டெல்லி விவசாய போராளி ராஜ்வீந்தர் சிங் கோல்டன் தெரிவித்துள்ளார்.

“வெல்லம் விற்றவரும், டீ விற்றவரும் கூட்டு சேர்ந்து நாட்டை விற்கப்போகிறார்கள்” - விளாசும் பஞ்சாப் விவசாயி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க-வை டெபாசிட் இழக்கச் செய்யாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என பஞ்சாப்பை சேர்ந்த விவசாய போராளி ராஜ்வீந்தர் சிங் கோல்டன் சூளுரைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க வெற்றி வேட்பாளர் கயல்விழி செல்வராஜை ஆதரித்து தாராபுரம் ஒன்றிய பகுதிகளில், டெல்லி விவசாய போராளி ராஜ்வீந்தர் சிங் கோல்டன் வாக்கு சேகரித்தார்.

செய்தியாளர்களிடம் விவசாயி ராஜேந்திர சிங் கோல்டன் கூறுகையில், “பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், பா.ஜ.கவுக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். ஏனென்றால் பா.ஜ.க அரசின் பொய்யை நம்பி நடுரோட்டுக்கு வந்துவிட்டோம்.

விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து டெல்லி முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்து, நாளையுடன் நான்கு மாதங்கள் முடிவடையப் போகிறது. இந்தப் போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டார்கள். விவசாயிகளைப் பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல், தமிழ்நாட்டில் நடக்கின்ற தேர்தல் பிரச்சார வேலைகளை கவனிக்க வந்துவிட்டார்கள்.

எங்களது போராட்டம் குறித்து செய்திகளை ஒளிபரப்ப, எந்த ஊடகத்தையும் அனுமதிப்பது கிடையாது. ஏனென்றால் உண்மை நிலையை மக்கள் அறிந்து கொண்டால், தேர்தலில் தோற்று விடுவோம் என்பதை உணர்ந்து, பா.ஜ.கவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் ஆட்களை வைத்துக்கொண்டு பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டு விவசாயிகள் எங்களுக்கு ஆதரவாக, டெல்லியில் எங்களுடன் தங்கி, எங்களுக்கு உறுதுணையாக இருந்து போராடினார்கள். எனவே அவர்களுக்காக நாங்கள் பா.ஜ.கவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம்.

அ.தி.மு.க ஜெயித்தாலும், அது பா.ஜ.க ஜெயித்தது மாதிரிதான். எனவே பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துள்ள அனைத்து கட்சிகளையும் தோற்கடித்தால்தான், நாடு முன்னேறும்.

வெல்லம் விற்ற விவசாயி நான் என ஒருவரும், டீ விற்றவன் நான் என இன்னொருவரும் கூட்டணி அமைத்துள்ளனர். இருவரும் சேர்ந்து நாட்டை விற்று விடுவார்கள். எனவே இவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற அவர்களுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளோம். பா.ஜ.க-வை டெபாசிட் இழக்கச் செய்யாமல் இங்கிருந்து கிளம்ப மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories