திமுக அரசு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #Election2021

தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் 6 தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #Election2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்:

காங்கிரஸ் - 25

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 6

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 6

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - 6

விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 3

மனிதநேய மக்கள் கட்சி - 2

தமிழக வாழ்வுரிமை கட்சி - 1

ஆதித்தமிழர் பேரவை - 1

மக்கள் விடுதலைக் கட்சி - 1

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் - 1

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #Election2021

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் 6 தொகுதிகளின் விபரம் வருமாறு :

பவானிசாகர் (தனி)

திருப்பூர் வடக்கு

வால்பாறை (தனி)

சிவகங்கை

திருத்துறைப்பூண்டி (தனி)

தளி

banner

Related Stories

Related Stories