தேர்தல்2021

“6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி; மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம்” - வைகோ பேட்டி!

தி.மு.க கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

“6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி; மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம்” - வைகோ பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட முன்னணி கட்சிகள், வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க தலைமையிலான மெகா கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ம.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுற்றுள்ளது.

தி.மு.க கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

“6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி; மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம்” - வைகோ பேட்டி!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, “தேர்தல் தேதி நெருங்கி வருவதால், புதிய சின்னத்தில் போட்டியிடுவதும், பிரச்சாரம் செய்வதும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனும் நடைமுறையைப் புரிந்துகொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

சனாதன இந்துத்வா சக்திகள் மூர்க்கமாக தமிழகத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிற காரணத்தால், திராவிட இயக்க பூமியில் இத்தகைய சக்திகளை முறியடிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பக்கபலமாக இருப்போம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories