திமுக அரசு

“அதிமுக ஆட்சியில் எண்ணற்ற கொடுமைகளையே அனுபவித்தோம்” - நொந்துக்கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

சாலை பணியாளர்கள், மக்கள் நல பணியாளர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட எண்ணற்ற கொடுமைகளை அப்போதைய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனுபவித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிமுக ஆட்சியில் எண்ணற்ற கொடுமைகளையே அனுபவித்தோம்” - நொந்துக்கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணற்ற கொடுமைகளை மட்டுமே அனுபவித்ததாக கூறியுள்ளார் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சா.அருணன்.

இது தொடர்பாக தினகரன் நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தியின் விவரம் பின்வருமாறு:-

2003ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்தி செயல்படுத்தியது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அரசு. இதிலே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்வி குறியானது. புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே கொண்டுவர அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு இயந்திரம் செயல்படாமல் முடங்கிப்போனது. எந்த அரசு அலுவலகங்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் செயல்படவில்லை. அரசு மிரண்டுபோனது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களையும் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணாமல், அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு துறைரீதியான நடைவடிக்கைகளை எடுத்து மிரட்டியது தமிழக அரசு. ஆனால், அவர்கள் அரசிடம் மண்டியிடவில்லை, எதிர்கால வாழ்வாதார கோரிக்கை நிறைவேற்ற வெற்றிக்காக தொடர்ந்து போராடினார்கள்.

ஆனால், அவர்களை அழைத்து பேசாமல் அரசு சுய கவுரவத்திற்காக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையை ஏவிவிட்டு வழக்குகள் தொடர்ந்து கிட்டத்தட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் மற்றும் துறைரீதியாக நடவடிக்கைகளை எடுத்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேரை சிறையில் அடைத்தது. அவர்கள் அனைவரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது, அடக்குமுறையை ஏவிவிட்டாலும், போராட்டக்களம் இன்னும் தீவிரம் அடைந்தது, அரசு செயல்பாடுகள் முடங்கியது.

அப்போதைய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூக தீர்வு காணாமல், அடக்குமுறையை தீவிரப்படுத்தி, 1 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இரவோடு இரவாக பணி நீக்கம் செய்தது, இதை சற்றும் எதிர்பார்க்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிலர், அதிர்ச்சியில் மரணம் அடைந்தனர். பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடல்நலம் குன்றியது, அவர்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியது.

“அதிமுக ஆட்சியில் எண்ணற்ற கொடுமைகளையே அனுபவித்தோம்” - நொந்துக்கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

இந்த நிலையில் அரசு செயல்படாத சூழ்நிலையில், அதனை சமாளிக்க 15,000 இளநிலை உதவியாளர்களை மாதம் ரூ4000/- தொகுப்பூதியத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்தது. பின்பு சென்னை உயர்நீதிமன்றம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதித்து தீர்ப்பளித்த நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் நாடியது அரசு. நீதிமன்ற தீர்ப்பு அரசிற்கே சாதகமானது, அரசே முடிவெடுக்கலாம் என தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் நிதி பற்றாக்குறையை காரணம்காட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சிக்கின்ற விதமாக  2004ம் ஆண்டு வேலைவாய்ப்பிற்கு தடையாணை பிறப்பித்தது. இதன் காரணமாக 2004 முதல் 2006 வரை அனைத்து ஆசிரியர்களையும் ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பூதியத்தில் ஐந்து வருடம் ஒப்பந்தத்தில் 60,000திற்கு மேற்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களையும்  பணி நியமனம் செய்தது அப்போதைய அதிமுக அரசு. அதாவது இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூ3000/- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ4000/- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ4500/- என்ற தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்தது.

சாலை பணியாளர்கள், மக்கள் நல பணியாளர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட எண்ணற்ற கொடுமைகளை அப்போதைய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனுபவித்தனர். பின்பு 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர், அதிமுக ஆட்சியில் 2004ம் ஆண்டு வேலைவாய்ப்பிற்கு போடப்பட்ட தடையாணையை நீக்கி ஒரே கையெழுத்தில் 60,000 அனைத்துவகை ஆசிரியர்களையும் கோரிக்கை வைக்காமலேயே ஜூன் 1, 2006 முதல் காலமுறை ஊதியத்தில் கொண்டு வந்து பணி நிரந்தரம்செய்து அவர்களின் வாழ்வில் விளக்கேற்றினார்.

அதேபோன்று 2003ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில மூலமாக 15 ஆயிரம் இளநிலை உதவியாளர்களை ரூ4000/- மாத ஊதியத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களை அப்போதைய அரசு பணி நிரந்தரம் செய்யாமல் கைவிரித்தது.

2006ம் ஆண்டு ஆட்சி செய்த கலைஞர் அரசு, அனைவரையும் காலமுறை ஊதியத்தில் கொண்டுவந்து பணி நிரந்தரம் செய்தது. அப்போது வழக்கு தொடரப்பட்டது. இளநிலை உதவியாளர்களை தமிழ்நாடு தேர்வு வாரியத்தின் மூலமாகவே தேர்வடைந்தவர்கள் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும் என்று. நீதிமன்றமும் தேர்வாரியத்தின் மூலமாகவே நியமனம் செய்ய வேண்டும். இவர்களின் பணி நிரந்தரம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது. ஆனால் கலைஞர், அதிமுக அரசால் நியமனம் செய்தவர்கள் என பாரபட்சம் பாராமல், தமிழ்நாடு தேர்வாரியத்தின் மூலமாக அவர்களுக்குள்ளாக தேர்வை நடத்தி அனைவரையும் பணி நிரந்தரம்செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தினார்.

1978ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மேனிலைப்பள்ளியில் தொடங்கப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவு 1800 தொழிற்கல்வி ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்தது. அவர்களை அப்போதைய எம்,ஜி.ஆர் அரசு பணி நிரந்தரம் செய்யவில்லை. பின்பு 1989ம் ஆண்டு கலைஞர், ஆட்சிக்கு வந்தபோது அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. உடனே பரிசீலனை செய்து அனைவரையும் காலமுறை ஊதியத்தில் கொண்டு வந்து பணி நிரந்தரம் செய்தார் கலைஞர்.

எப்போதெல்லாம் மத்திய அரசு ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துகிறதோ அப்போதெல்லாம் கோரிக்கை வைக்காமலேயே ஊதியத்தை உயர்த்தியவர் கலைஞர். எப்போதெல்லாம், அகவிலைப்படியை உயர்த்துகிறதோ அப்போதெல்லாம் கோரிக்கைக்கு இடமளிக்காமல்  உடனே உயர்த்தியவர் கலைஞர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை செவிசாய்த்து கேட்டறிந்து நிறைவேற்றி அரசு ஊழியர்களின் காவலராகவே திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர்.

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் நியாயமான போராட்டங்கள் அனைத்திலும், நாங்கள் அழைக்காமலேயே எங்கள் நியாயத்தை அறிந்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர போராடிய போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களுக்கும் நேரடியாக வந்து ஆதரவு அளித்துள்ளார். அரசு ஊழியர்களின் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற பாடுபடுவோம் என சூளுரைத்து கலைஞரின் மறு உருவமாக திகழ்கிறார்.

banner

Related Stories

Related Stories