Election2026

🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!

மூன்று மாநில தேர்தல் நிலவரங்களை உடனுக்கு உடன் தெரிந்துக்கொள்ள கலைஞர் செய்திகள் இணையத்தில் இணைந்திருங்கள்!

🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
9 April 2026, 04:44 AM

கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!

காலை 9 மணி நிலவரப்படி, அசாம் மாநிலத்தில் 17.87% வாக்குப்பதிவும், கேரளம் மாநிலத்தில் 16.23% வாக்குப்பதிவும், புதுச்சேரியில் 17.4% வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

9 April 2026, 04:04 AM

புதுச்சேரியில் 17.41% வாக்குகள் பதிவு!

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 17.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.

9 April 2026, 04:01 AM

கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உற்சாகமான சூழலில் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையாக நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

காலை முதலே பெண்கள், முதியோர், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவது கணிசமாக காணப்படுகிறது. குறிப்பாக, முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் அதிக உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில காவல்துறை இணைந்து பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர். எந்தவித அவசர நிலைகளும் ஏற்படாத வகையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் விரைவு நடவடிக்கை குழுக்கள் பணியில் உள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டு, மே -04-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் கேரளம் (140 இடங்கள்), அசாம் (126 இடங்கள்), புதுச்சேரி (30 இடங்கள்) என மொத்தம் 296 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும் 5.3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பங்கேற்கும் இந்த தேர்தல், தேசிய அரசியல் நிலவரத்திற்கே தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories