தேர்தல் 2024

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு நீதிமன்றம் கேள்வி !

தேர்தலின் போது, ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பதியப்பட்ட வழக்கை எப்படி சட்டவிரோத வழக்கு என கூறமுடியும் என பாஜக நிவாகி கேசவ விநாயகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு நீதிமன்றம் கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்பரம் இரயில் நிலையத்தில் போலீசாரால் 3 பேரிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், அந்த மூன்று பேரில் முக்கிய நபர் நயினாருக்கு சொந்தமான ஹோட்டலின் ஊழியர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து நயினார் நாகேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்தடுத்து என பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து சிக்கி வந்த நிலையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பினர்.

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு நீதிமன்றம் கேள்வி !

இந்த சூழலில் சம்மனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது என்பதால் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கேசவ விநாயகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது மனுதாரருக்கும் இதற்கு சம்மந்தமில்லை என்றும், எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே சட்டவிரோதமாக பதியப்பட்ட வழக்கை புலன் விசாரணை செய்ய முடியாது என்றும் வாதிட்டார்.

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு நீதிமன்றம் கேள்வி !

தொடர்ந்து எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வாதத்தை கேட்ட நீதிபதி, தேர்தல் சமயத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கை சட்டவிரோத வழக்கு என எப்படி கூறமுடியும்? என்று கேசவ விநாயக தரப்புக்கு கேள்வியெழுப்பினார். அதோடு போலீசார் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், தேர்தல் தொடர்பான இந்த வழக்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். வழக்கறிஞரின் இந்த வாதத்துக்கு தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது; நடைமுறையை பின்பற்றினால் பணம் சென்று விடும் என்று நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 6ம் தேதி தள்ளி வைத்தார்.

banner

Related Stories

Related Stories