தேர்தல் 2024

பா.ஜ.க கப்பலை மூழ்கடிக்கும் மக்கள் கடல் : உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் பிரச்சாரத்தில் திரண்ட மக்கள்!

மக்களவை தேர்தலில் பா.ஜ.க முழுமையாக தூக்கி எறியப்படும் என அகிலேஷ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

பா.ஜ.க கப்பலை மூழ்கடிக்கும் மக்கள் கடல் : உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் பிரச்சாரத்தில் திரண்ட மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நேற்று உத்தர பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கும், பா.ஜ.க கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் பலவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தன.

அதேபோல், 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகளிலும் மக்கள் எழுச்சியுடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். இது ஆட்சி மாற்றத்தை காட்டுகிறது. மேலும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகளும் இந்தியா கூட்டணி ஆட்சியை உறுதி செய்துள்ளது என நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் பா.ஜ.க முழுமையாக தூக்கி எறியப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உறுதியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், சந்த்கபீர் நகரில் திரண்டிருக்கும் இந்த மக்கள் ஆதரவு பா.ஜ.கவின் கப்பலை மூழ்கடித்துவிடும் என்பதை காட்டுகிறது. இந்தியா கூட்டணி மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. 6 ஆவது கட்ட வாக்குப்பதிவில் பா.ஜ.க முழுமையாக தூக்கி எறியப்படும்" என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்படும் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பிரச்சாரங்களுக்கு செல்லும் இடம் எல்லாம் மக்கள் அலைகடலென திரண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். உத்தர பிரதேசத்தை போன்றுதான் நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் திரண்டு வந்து ஆதரவு கொடுப்பது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை பிரதிபலித்துள்ளது.

banner

Related Stories

Related Stories