தேர்தல் 2024

வாக்களிக்க உதவுவதாக கூறி மோசடி... பாஜக சின்னத்திற்கு வாக்களித்த நபர்... வட மாநிலங்களில் தொடரும் மோசடி !

வாக்களிக்க சென்ற பெண் ஒருவருக்கு உதவுவதாக கூறி, பாஜக சின்னத்துக்கு வாக்களித்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

வாக்களிக்க உதவுவதாக கூறி மோசடி... பாஜக சின்னத்திற்கு வாக்களித்த நபர்... வட மாநிலங்களில் தொடரும் மோசடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், 4 கட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. இன்று (மே 20) 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் வட மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துவ வருகிறது. ஏற்கனவே வட மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் வாக்குபதிவின்போது பல சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சி கூட்டணியாக போட்டியிடுகிறது. அதே வேளையில் பாஜகவும் அம்மாநில சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்த சூழலில் உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் தொகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பெண் ஒருவர் வாக்களிக்க சென்றுள்ளார்.

வாக்களிக்க உதவுவதாக கூறி மோசடி... பாஜக சின்னத்திற்கு வாக்களித்த நபர்... வட மாநிலங்களில் தொடரும் மோசடி !

அப்போது அவருக்கு உதவுவதாக கூறி அங்கிருந்த நபர் ஒருவர், அந்த பெண்ணை அழைத்து பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் வாக்களித்துள்ளனர். இதையடுத்து இந்த மோசடி குறித்து அந்த பெண் வெளியே வந்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், தான் சைக்கிள் சின்னத்திற்கு (அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி) வாக்களிக்க வந்ததாகவும், தனக்கு உதவுவதாக கூறி வாக்குச்சாவடியில் இருந்த நபர் பாஜக சின்னத்துக்கு வாக்களித்ததாகவும் தெரிவித்தார்.

வாக்களிக்க உதவுவதாக கூறி மோசடி... பாஜக சின்னத்திற்கு வாக்களித்த நபர்... வட மாநிலங்களில் தொடரும் மோசடி !

இந்த விவகாரம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவம் இங்கு மட்டுமல்ல. வட மாநிலங்களில் உள்ள அநேக இடங்களில் உதவி செய்வதாக கூறி பாஜகவினர் மோசடி செய்து வருகின்றனர். ஏற்கனவே பாஜகவுக்கு அதிக இடத்தில் கள்ள ஓட்டு போட்ட விவகாரம் அம்பலமான நிலையில், தற்போது இந்த விவகாரமும் வெளி வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories