தேர்தல் 2024

பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறும் நிதிஷ் குமார்? : பீதியில் மோடி, அமித்ஷா!

பா.ஜ.க கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறும்  நிதிஷ் குமார்? : பீதியில் மோடி, அமித்ஷா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவை தேர்தலில் 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி களமாடி வருகின்றன. இக்கூட்டணி உருவாக்கத்திற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த ’இந்தியா’ கூட்டணியால் அச்சத்தில் இருந்த பா.ஜ.க நிதிஷ்குமாரை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் கூட்டணி சிதைந்து விடும் என கணக்கு போட்டது. அதன்படி நிதிஷ்குமார் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தார்.

ஆனால் ’இந்தியா’ கூட்டணி சிதையவில்லை. நிதிஷ்குமார் சென்ற பிறகுதான் இன்னும் ’இந்தியா’ கூட்டணி பலமாக வலுவடைந்தது. தற்போது மக்களவை தேர்தலில் இந்தியா முழுவதும் ’இந்தியா’ கூட்டணியின் அலைதான் வீசுகிறது.

மேலும் நிதிஷ்குமார் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாலும் இக்கூட்டணியில் இருக்கும் மன கசப்பை தனது செயல்பாட்டில் நிதிஷ்குமார் வெளிப்படுத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் இணைந்து வேண்டா வெறுப்பாகவே நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்துள்ளார் என்பதை இணையத்தில் வெளிவந்த வீடியோ உறுதிபடுத்தியுள்ளது.

அதேபோல், வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதீஷ் குமார் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான தங்களது போராட்டத்துக்கு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் முழு ஆதரவு உள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி தெரிவித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories