தேர்தல் 2024

”பொது விவாதத்திற்கு நான் தயார்” : ராகுல் காந்தி எம்.பி அதிரடி அறிவிப்பு!

பொது விவாதத்திற்கு நான் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

”பொது விவாதத்திற்கு நான் தயார்” : ராகுல் காந்தி எம்.பி அதிரடி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் இட ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டம் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதை மையமாகவைத்துத்தான் பா.ஜ.க கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் உரைகள் அமைந்து வருகிறது.

இந்நிலையில் பொது மேடையில் விவாதம் நடத்தப் பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா ஆகிய மூன்று பேர் கடிதம் எழுதி அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து இந்த பொது விவாதத்திற்கு ராகுல் காந்தி கலந்து கொள்வதாகப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மக்களவை தேர்தலுக்கான பொது விவாதத்திற்கு உங்கள் அழைப்புக்கு நன்றி. உங்களது அழைப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் விவாதம் நடத்தினேன்.

இப்படியான விவாதம் கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் உதவும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். பொதுமக்கள் தலைவர்களிடம் நேரடியாக கேள்விகளை கேட்கத் தகுதியானவர்கள்.

அதன்படி நானோ அல்லது காங்கிரஸ் கட்சி தலைவர்களோ இதுபோன்ற விவாதத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் மோடி எப்போது பங்கேற்க ஒப்புக்கொள்கிறார் என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள். அதன் பிறகு விவாதத்தின் விவரங்களையும் வடிவத்தையும் விவாதிக்கலாம். உங்கள் முயற்சிக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. ஆக்கப்பூர்வமான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க விவாதத்தில் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories