தேர்தல் 2024

நாடாளுமன்ற தேர்தல் : பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவுக்கு எழும் கடும் எதிர்ப்புகள் : காரணம் என்ன?

பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களிலேயே பாஜகவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுவதால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் : பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவுக்கு எழும் கடும் எதிர்ப்புகள் : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் குஜராத் ராஜ்கோட் தொகுதிக்கு ஒன்றிய அமைச்சரான பர்ஷோத்தம் ரூபாலாவை பாஜக அறிவித்துள்ளது.

இந்த சூழலில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், ராஜ்புத் சமூகத்தினரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ராஜ்புத் சமூகத்தினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார். எனினும் ரூபாலாவை மாற்ற வேண்டும் என பாஜகவை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் : பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவுக்கு எழும் கடும் எதிர்ப்புகள் : காரணம் என்ன?

இதனால் அம்மாநில போலீசார், ராஜ்புத் சமூகத்தினர் மீது தடியடி நடத்தினர். இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த அந்த சமூகத்தினர், பாஜகவுக்கு எதிராக 400 வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அந்த சமூகத்தினர் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் : பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவுக்கு எழும் கடும் எதிர்ப்புகள் : காரணம் என்ன?

அதோடு உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சராக இருக்கும் வி.கே.சிங் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட தாகூர் சமுதாயத்தினருக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்து தாகூர், ராஜ்புத் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சஹாரன்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பாஜகவுக்கு யாரும் வாக்களிக்க கூடாது என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மேலும் மாற்றுக்கட்சியில் யாரேனும் தாகூர் சமுதாயத்தினர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராஜ்புத் சமூகத்தினரை குறிப்பிட்டு அவதூறாக பேசியதை தொடர்ந்து பாஜகவுக்கு, பாஜக ஆளும் மாநிலங்களிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், பாஜகவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories