தேர்தல் 2024

"10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?" -அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பிய நபரை தாக்கிய பாஜகவினர் !

அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய விசைத்தறியாளர் ஒருவரை அங்கிருந்த பாஜகவினர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.

"10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?"  -அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பிய நபரை தாக்கிய பாஜகவினர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அந்த வேலையே ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்தார். ஆனால், போலீஸ் அதிகாரியாக இருந்தபோது அவர் பிடித்த ரௌடிகளை விட அதிகமானோரை அவர் பாஜக தலைவரான பின்னர் பாஜகவுக்கு பிடித்து வந்துள்ளார்.

இதனால் அவர் செல்லும் இடமெல்லாம் அவரை சுற்றி குற்றச்செயலில் ஈடுபடுபவர்களே வழம்வருகிறார்கள். அவர்கள் அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பும் நபர்களை தாக்கி வருவதும் தொடர்கதையாகியுள்ளது. இந்த நிலையில் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய விசைத்தறியாளர் ஒருவரை அங்கிருந்த பாஜகவினர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த பூமலூர் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிற அப்போது பிரச்சாரத்தின் போது தேசிய அண்ணாமலை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம் ஜவுளி தொழிலை காத்திடுவோம் என அண்ணாமலை பேசினார்.

"10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்?"  -அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பிய நபரை தாக்கிய பாஜகவினர் !

அப்போது விசைத்தறியாளர் ஒருவர் அவரைக் குறுக்கிட்டு கடந்த 10 ஆண்டு காலமாக நீங்கள் தானே ஆட்சி செய்தீர்கள் ஜவுளி தொழிலை நீங்கள் காக்க வில்லையே கடந்து பத்து ஆண்டுகாலம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

உடனே அண்ணாமலையை சுற்றி இருந்த பாஜகவினர் அவரைத் தாக்க முயன்றனர். எனினும் தொடர்ந்து நான் கேட்டதற்கு பதில் அளிக்குமாறு விசைத்தளியாளர் கேட்கவே அவரை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories