தேர்தல் 2024

பணத்தில் புரண்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர்:“ஊழல் புதைகுழியில் பாஜகவும், அதன் கூட்டணிகளும்”- காங்.விமர்சனம்

பணத்தில் புரண்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர்:“ஊழல் புதைகுழியில் பாஜகவும், அதன் கூட்டணிகளும்”- காங்.விமர்சனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக அரசு அமைக்கும்போது, ஊழலை ஒழிப்பேன், லஞ்சத்தை ஒழிப்பேன் என்று வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக அளித்தது. மேலும் கருப்பு பணத்தை கண்டறிந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் அனுப்பப்படும் என்றும் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை அதில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வழக்கம்போல் இதேபோல் வாயால் வடை சுட பாஜக தயாராகி வருகிறது. இந்த சூழலில் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் பணக்குவியலில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பணத்தில் புரண்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர்:“ஊழல் புதைகுழியில் பாஜகவும், அதன் கூட்டணிகளும்”- காங்.விமர்சனம்

அசாம் மாநிலத்தில் பாஜகவின் NDA கூட்டணியில் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) கட்சி உள்ளது. இதன் தலைவராக பிரமோத் போரோ இருந்து வருகிறார். இந்த சூழலில் இந்த கட்சியின் முக்கிய நிர்வாகியும் கிராம சபை வளர்ச்சிக் குழுவின் தலைவருமான பெஞ்சமின் பாசுமதரி (Benjamin Basumatary) ரூ.500 நோட்டுகள் இருக்கும் பணக்குவியலில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்துக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், ஊழலை ஒழிப்பதாக பேசி வரும் மோடி அரசு, இது போன்ற நிகழ்வுகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்ட சமூக வலைதள பதிவு வருமாறு :

“தேர்தலுக்கு மத்தியில் பா.ஜ.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஊழல் புதைக்குழியில் தத்தளிப்பதைக் காட்டுகிறது இந்தப் படம். தங்களைப் போலவே நாட்டைக் கொள்ளையடிப்பவர்களை பார்த்து கூட்டணி அமைத்துள்ளது பா.ஜ.க” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது போன்ற புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

banner

Related Stories

Related Stories