தேர்தல் 2024

தேர்தல் 2024 : அடுத்தடுத்து பின்வாங்கும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகள்... வட மாநிலங்களிலும் வீழும் பாஜக!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை தொடர்ந்து, கூட்டணியில் இருந்தும் 2 மாநில ஆளுங்கட்சிகள் விலகியுள்ளது.

தேர்தல் 2024 : அடுத்தடுத்து பின்வாங்கும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகள்... வட மாநிலங்களிலும் வீழும் பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த சூழலில் இதனை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இந்தியா கூட்டணி மற்றும் NDA கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக வேட்பாளர்கள், தாங்களே போட்டியிடவில்லை என்று கூறி பின்வாங்கியுள்ளனர். மேலும் பாஜகவின் கூட்டணி கட்சிகளும், பின் வாங்கியுள்ளது.

அதாவது மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் திடீரென போட்டியில் இருந்து பின்வாங்கியுள்ளது. நேற்றைய முன்தினம் குஜராத் மாநிலத்தின் வதோதரா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரஞ்சன்பென் தனஞ்சய் பட், தான் போட்டியிடவில்லை என்று பின்வாங்கியுள்ளார்.

தேர்தல் 2024 : அடுத்தடுத்து பின்வாங்கும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகள்... வட மாநிலங்களிலும் வீழும் பாஜக!

இவரை தொடர்ந்து நேற்று (23.03.2024) சபர்கந்தா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிகாஜி தாகூரும் பின்வாங்கியுள்ளார். பிகாஜி தாகூர், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இருந்து வந்த நிலையில், 34 ஆண்டுகாலமாக பாஜகவில் இருந்து வருகிறார். இவர் முதல் முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்தே பின்வாங்கியுள்ளார்.

சபர்கந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பழங்குடியின தலைவரும் எம்.எல்.ஏ-வுமான துஷார் சவுத்ரி அறிவிக்கப்பட்ட நிலையில், பிகாஜி தாகூர் பின்வாங்கியுள்ளார். 2 நாட்களில் தொடர்ந்து 2 வேட்பாளர்கள், அதுவும் பாஜக ஆளும் மாநிலத்தின் வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளது பாஜகவுக்கு தொடர் பின்னடைவை காட்டுகிறது.

குஜராத்தில் 2014, 2019 ல் 26/26 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவின் நிலை இன்று இதுதான் என்றால், 2024 லோக்சபாவில் தேசிய அளவில் அவர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் 2024 : அடுத்தடுத்து பின்வாங்கும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகள்... வட மாநிலங்களிலும் வீழும் பாஜக!

முன்னதாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி தொகுதியில் பாஜக வேட்பாளராக பாலியல் சர்ச்சையில் சிக்கிய உபேந்திர சிங் ராவத் அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பவே அவரும் பின் வாங்கியுள்ளார். அதே போல் மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளராக போஜ்புரி நடிகரும் பாடகருமான பவன் சிங் அறிவிக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலே தான் போட்டியிடவில்லை என்று விலகினார்.

இப்படி தொடர்ந்து எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் கூட்டணி ஒற்றுமையையும் கண்டு பாஜக வேட்பாளர்களே பின்வாங்கி வருகிறது. அதே போல் பாஜக கூட்டணியில் இருந்து ஒடிசாவில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், சிக்கிமிலும் ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகாரி மோர்சா கட்சியும் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டது.

தேர்தல் 2024 : அடுத்தடுத்து பின்வாங்கும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகள்... வட மாநிலங்களிலும் வீழும் பாஜக!

அதேபோல் சக்திவாய்ந்த பழங்குடியின குரல் ஆனந்த் படேலை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்ததை அடுத்து, வல்சாத் பாஜக வேட்பாளரும் போட்டியிடுவதை நிராகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்றிய சுகாதார அமைச்சரும், போர்பந்தர் பாஜக வேட்பாளருமான மன்சுக் மாண்டவியாவும் போட்டியிடுவதை நிராகரிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பே, ராஜஸ்தான், சுரு தொகுதி பாஜக எம்.பி - ராகுல் கஸ்வான், ஹரியானா, ஹிஸார் தொகுதி பாஜக எம்.பி - பிஜேந்திர சிங், மேற்கு வங்கம், ஜார்கிராம் தொகுதி பாஜக எம்.பி - குனார் ஹெம்ப்ராம், மேற்கு வங்க பாஜக எம்.எல்.ஏ - முகுத் மணி அதிகாரி உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகினர்.

அதானியின் பணத்தை வாங்கிக்கொண்டு, GODI ஊடகங்கள் பாஜக கூட்டணிக்கு 400+ என்ற பொய்யான ஒரு பிம்பத்தை திருப்பி திருப்பி காட்டிக் கொண்டு இருக்கின்றன. இந்த தேர்தலில் பாஜக 160 இடங்களைக் கடக்காது என்பதே நிதர்சனமான உண்மை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories