தி.மு.க

“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. திமுக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்”

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் இன்று (ஜூன் 10) திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. திமுக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

திமுக-வில் தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையை ஏற்று களப்பணியாக்கும் நோக்கத்துடன் பல்வேறு தரப்பினரும் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர்.

கழகத்தில் இணையும் ஓவ்வொருவரையும் இன்முகத்தோடு வரவேற்று, ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும் கழகத்தை தேடி வருபவர்களை அன்போடு அணைத்து வருகிறார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

“கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. திமுக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்”

இதனைத் தொடர்ந்து, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (ஜூன் 10) மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்ஜமின் அவர்கள் தலைமையில்;

அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் யாமினி இளையராஜா - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ் - 155வது வட்டக் கழக செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

banner

Related Stories

Related Stories