தி.மு.க

“உலகில் தோன்றிய முதல் மனிதன் திராவிடன்..” - திராவிடப் புவியியல் 1 : சிறப்புக் கட்டுரை !

“உலகில் தோன்றிய முதல் மனிதன் திராவிடன்..” - திராவிடப் புவியியல் 1 : சிறப்புக் கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதல் மனிதன் திராவிடன்.. இடம்.. இயக்கம்..! - எம்.எம்.அப்துல்லா.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை தோன்றியது, வளர்ந்தது, வலுவடைந்தது, கிளை பரப்பியது என தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையும் வரலாற்றில் தனக்கான இடத்தைப் பெற்றிருக்கும். அப்படியான இடங்களை அறிமுகப்படுத்தும் திராவிடப் புவியியல் தொடர் இது... 

உலகில் தோன்றிய முதல் நாகரிகம், திராவிட நாகரிகம். உலகின் முதல் மனிதன் திராவிடன். கற்கால மனிதர்களின் நாகரிகம் இதுவே. இந்தப் பெருமையை நாம் கோருவதைத்தான் ‘இனவாதம்’ என்று குற்றம்சாட்டுகிறது ஆரியம். ஆனால், அறிவியல், திராவிடர் சார்புடைய சான்றுகளை அள்ளித் தருகிறது.

2008-ஆம் ஆண்டு ஓர் ஆய்வறிக்கை வெளிவந்தது. மதுரை உசிலம்பட்டி அருகே ஜோதிமாணிக்கம் என்கிற ஊரில் வசிக்கும் ‘விருமாண்டி’ என்பவர் மரபியல் ஆய்வுக்கு உட்பட்டார். அவரிடம் ‘130 டி.என்.ஏ’ என்கிற மரபணு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரபணுவுக்கு ஒத்த மரபணுக்கள் மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் சிலருக்கும், ஆஸ்திரேலியாவின் ‘அபோரிஜின்’ (aborigin-பழங்குடியினர்) மக்களில் சரிபாதிக்கு மேற்பட்டோருக்கும் இருக்கிறது.

“உலகில் தோன்றிய முதல் மனிதன் திராவிடன்..” - திராவிடப் புவியியல் 1 : சிறப்புக் கட்டுரை !

நிலத்தைக் கடல் பிரித்திருக்கிறது. அப்படியிருக்க ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத பல்வேறு நிலங்களில் ஒரே மரபணு கொண்ட மனிதர்கள் இருப்பது எதைக் குறிக்கிறது? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் ஒரு தாய் வயிற்றில் கிளைத்து வளர்ந்த பிள்ளைகள் என்றுதானே?

திரும்பிப் பார்க்க வைத்த திருவள்ளூர்

ஆப்பிரிக்காவில்தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான் என்று உலகம், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை நம்பிக் கொண்டிருந்தது. ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து 65,000 ஆண்டுகளுக்கு முன்பாக தெற்குக் கடற்கரை வழியாக மனிதன் நடக்க ஆரம்பித்தான். அவன் உலகெங்கும் வியாபித்தான் என்பதே இதுவரை நமக்குச் சொல்லப்பட்ட வரலாறு.

அதே காலக்கட்டத்தில் தென்னிந்தியாவிலும் மனிதர்கள் வாழ்ந்தார்கள். ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், ஹார்வர்ட் பிராட் கழகம், மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுகள் பல்வேறு புதிய திறப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

“உலகில் தோன்றிய முதல் மனிதன் திராவிடன்..” - திராவிடப் புவியியல் 1 : சிறப்புக் கட்டுரை !

மனித இனத்தின் ஆதிவரலாற்றின் மீது அவை வெளிச்சம் பாய்ச்சி வருகின்றன. ‘நேச்சர்’ என்கிற ஆய்விதழில் இந்த ஆய்வுகளின் கண்டுபிடிப்பு முடிவுகள் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உலகின் முதல் மனிதன் பிறந்தான் என்று 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்தது. திராவிடர்களை ‘ஆஸ்திரலோயிட்’ என்கிற இனப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வசித்த மனித இனம் இது. அதாவது குரங்கிலிருந்து மனிதன் முழுமையாகப் பரிணாமம் பெறுவதற்கு முன்பு இருந்த நிலை அது. இக்கட்டுரையின் முதல் பத்தியை இப்போது வாசியுங்கள். உலகின் முதல் மனிதன் திராவிடன் என்று கோருவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?

‘இடம்-இயக்கம் என்று தொடருக்குத் தலைப்பு வைத்துவிட்டுப் பழம்பெருமை பேசுகிறானே’ என்று சிலர் கருதக்கூடும். உலக வரலாற்றில் நம்முடைய இடம் எதுவென்று கோடிட்டுக் காட்டவே நிரூபிக்கப்பட்ட அறிவியல் சான்றுகள் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டியிருந்தது.

“உலகில் தோன்றிய முதல் மனிதன் திராவிடன்..” - திராவிடப் புவியியல் 1 : சிறப்புக் கட்டுரை !

தட்டிக் கேட்கும் திராவிடம்

நம் வரலாற்றின் மீது கருப்பு மை பூசி இருட்டடிப்பு செய்தார்கள். நம்மைத் தாழ்ந்தவர்கள் என்று ஸ்லோகங்களில் எழுதி வைத்தார்கள். நம் மண்ணுக்கு எந்தப் பெருமையுமில்லை என்று இழிவு செய்தார்கள். நம் மொழியை அழிக்க ஆனதெல்லாம் செய்தார்கள், செய்து வருகிறார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு ஓர் இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் இதையெல்லாம் தட்டிக் கேட்டது. இளைஞர்களைத் திரட்டியது.

மண்ணின், மக்களின், மொழியின் உரிமைகளை மீட்கப் போராடியது. கத்தியின்றி, ரத்தமின்றி போர் ஒன்று செய்தது. இந்தியாவுக்கு வெள்ளையர்களிடமிருந்து 1947-ல் சுதந்திரம் கிடைத்தது. நம் வரலாற்றைக் கொள்ளையடித்தவர்களிடமிருந்து நமக்கு இன்னமும்கூட முழுமையாகச் சுதந்திரம் கிடைக்க வில்லை. அதுவரை போர் ஓயாது. திராவிடர் இயக்கம் கண் துஞ்சாது.

“உலகில் தோன்றிய முதல் மனிதன் திராவிடன்..” - திராவிடப் புவியியல் 1 : சிறப்புக் கட்டுரை !

புவியியலும் தேவை

தலைமுறை, தலைமுறையாய் இங்கே தளபதிகள் தோன்றுவார்கள். தாஸர்கள், தஸ்யூக்கள், கருப்பர்கள் என்று திராவிடரை ரிக் வேதத்தில் இழிவான சொல்லாட்சிகளால் ‘ஏனடா எழுதினீர்கள்’ என்று அவர்களைக் கேட்பார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம், பியரி, படுகு, குடகு, குறும்பா, காணிக்காரர், கொற்ற கொருகா, இருளா, தோடா, கோத்தர், அல்லர், கோண்டி, முரியா, கூய், மாரியா குவி, பெங்கோ, கோயா, பர்தான், செஞ்சு, கொண்டா, நாகர்சால், மண்டா, கொலாமி, துருவா, ஒல்லாரி, நைக்கி, பிராகுயி, குறுக்ஸ், சவ்ரியா பஹரியா, குமார்பக் பஹரிய் உள்ளிட்ட கிட்டத்தட்ட நூறு மொழிகளைப் பேசிய திராவிடனை, மனுதர்மத்தில் என்னவென்று எழுதி வைத்திருக்கிறாய் என்று முச்சந்தியில் நிற்கவைத்து கேட்பார்கள் நம் திராவிட இளைஞர்கள்.

எங்கள் இளைஞர்களுக்கு நாங்கள் வரலாற்றை மட்டுமல்ல, புவியியலையும் கற்பிப்போம். ‘இன்று ஆப்கானிஸ்தானத்தில் பிராகுயி பேசுகிறானே? அவனும் திராவிடன்தான்’ என்பதை எடுத்துச் சொல்ல புவியியலும் எங்களுக்குத் தேவைதானே?

முதல் இடம்?

எங்கிருந்தோ வந்த கங்காணி ஆளுநர் தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்பதே சரியென்று சொல்லும் போது புரியாதவருக்கும் புரியத் துவங்கும் புவியியல் அரசியலில் முக்கியத்துவம்.

அடுத்த அத்தியாயத்திலிருந்து இடம் சுட்டிப் பொருள் பேசுவோம். சரி முதல் இடம் எது? திராவிடர் இயக்கத்தின் ஏணியான திருவல்லிக்கேணி.

வங்கக் கரையோரம் துயில் கொண்டிருக்கும் எங்கள் மூச்சின் முதல் குழந்தையான ‘முரசொலி’ யில், எங்கள் உயிர் துயில்கொள்ளும் தொகுதியில் இருந்தே தொடங்குவோம்.

பயணிப்போம்...

banner

Related Stories

Related Stories