தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் ஏற்பாட்டில் வளசரவாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் தாய் சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கழக சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் பழ.செல்வக்குமார், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராமாபுரம் ராஜேஷ் செய்திருந்தார்.