தி.மு.க

“இனி தருமபுரியும் தி.மு.க கோட்டை” : மாற்றுக்கட்சியினர் இணைந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் மாற்றுக்கட்சியினர் 2,000 பேர் தி.மு.கவில் இணைந்தனர்.

“இனி தருமபுரியும் தி.மு.க கோட்டை” : மாற்றுக்கட்சியினர் இணைந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2,000 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி தி.மு.கவில் ஒப்படைத்துக் கொள்வதற்காக ஏறக்குறைய 2,000 பேர் வந்துள்ளனர். நமது பழனியப்பன் இங்கு உரையாற்றும்பொழுது குறிப்பிட்டுச் சொன்னார். கொஞ்சம் லேட்டாக வந்துள்ளேன் என்றார். அவர் தாமதாக வந்தாலும் சரியான நேரத்தில்தான் வந்துள்ளார்.

சட்டப்பேரவையில் பழனியப்பன் பேசும்போது கவனிப்பேன். வேண்டுமென்றே சில அ.தி.மு.க அமைச்சர்கள் வெறுப்பு வரவேண்டும் என திட்டமிட்டு, வெளிநடப்பு செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு பேசுவது வழக்கம்.

ஒரு நான்கைந்து பேர் எந்த பிரச்சனைக்கும் வரமாட்டார்கள். அரசினுடைய திட்டங்கள், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் அதைமட்டும் பேசும் சில அமைச்சர்கள் அங்கு இருந்தார்கள். அதில் முதல் ஆள் பழனியப்பன். பழனியப்பன் பேசினால் முழுமையாகக் கேட்டுவிட்டு சென்றவர்கள் நங்கள்.

இப்போது அவர் எனது விருப்பத்தை ஏற்று கழகத்தில் ஆயிரக்கணக்கானோரோடு வந்துள்ளார். அவரை வரவேற்கிறேன். தருமபுரி மாவட்டத்தில் நாம் வீக் என்று சொல்வார்கள். இனி யாரும் தருமபுரி மாவட்டத்தை வீக் என்று சொல்ல முடியாது” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories