தி.மு.க

தி.மு.கவில் இணைந்த வடசென்னை அ.தி.மு.க, அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க, அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகள் தி.மு.கவில் இணைந்தனர்.

தி.மு.கவில் இணைந்த வடசென்னை அ.தி.மு.க, அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 15க்கும் மேற்பட்ட அ.தி.மு.க, அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகள் தி.மு.கவில் இணைந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க அலுவலகத்தில், இன்று காலை, சென்னை வடக்கு மாவட்டம், அ.தி.மு.கவைச் சேர்ந்த திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.சுப்புரு, வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஆர்.மகேஷ், வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.ராஜாமுகமது வடசென்னை வடகிழக்கு மாவட்ட மருத்துவர் அணி மாவட்டச் செயலாளர் மருத்துவர் பி.புகழேந்தி, வடசென்னை கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா, இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில தலைவர் மருத்துவர் பி.செந்தமிழ்பாரி, பெரம்பூர் பகுதி எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.எஸ்.அஸ்லாம், வட்டச் செயலாளர் எஸ்.பரிமளம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் எஸ்.வி.ரவி, வடசென்னை கிழக்கு எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மூர்த்தி, வடசென்னை தெற்கு (கிழக்கு) எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராமமஞ்செரி ஆர்.நடராஜன், வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ந.சேகர் (எ) பிரஸ் சேகர், வடசென்னை தெற்கு மாவட்டம், 55வது வட்ட அவைத்தலைவர் ம.மனோகர், மற்றும் அ.ம.மு.க கட்சியைச் சேர்ந்த மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் ஆகியோர் தி.மு.கவில் இணைந்தனர்.

இந்த இணைவில் இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வி.கலாநிதி வீராசாமி, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளையஅருணா, தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஜே. ஜான் எபினேசர் மற்றும் பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories