தி.மு.க

தமிழ்நாடு→காமன்வெல்த் : வலுதூக்கும் போட்டியில் சாதித்த தி.மு.க MLA - வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்று காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் தி.மு.க எம்.எல்.ஏ ராஜா.

தமிழ்நாடு→காமன்வெல்த் : வலுதூக்கும் போட்டியில் சாதித்த தி.மு.க MLA - வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வலுதூக்கும் வீரரும் சங்கரன்கோவில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான ராஜா 100 Kg, 110 Kg, 120 Kg கிலோ பிரிவில் முதல் பரிசினை வென்றார்.

இதன் மூலம் கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியிலும், நியூஸிலாந்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான காமன்வெல்த் போட்டியிலும் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில், மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்று காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ ராஜா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சார்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என வெறுமனே வாய் வார்த்தையாகச் சொல்லிவிடாமல் துறைசார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு உந்துதல்களை அளித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதன்படி ஏற்கெனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடற்பயிற்சி சார்ந்து சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர்.

அவ்வகையில் விளையாட்டுத் துறையில், சங்கரன்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ. ராஜா முத்திரை பதித்து சாதித்து, சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories