தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்கள் சிறுபான்மையினர் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை செலுத்தினர். அவர்கள் வழியில் இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் தளபதி அவர்கள் சிறுபான்மையினர் சமுதாய முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார்.
தி.மு.க ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, சட்டங்கள் இயற்றப்பட்டன. இஸ்லாமிய சமுதாயத்தின் தலைவரான பெரியவர் காயிதே மில்லத் அவர்கள் தி.மு.க தலைவர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோருடன் மிக நெருங்கிய நட்பில் இருந்தார். ஆட்சி அமைத்த பிறகு திராவிட முன்னேற்றக் கழக அரசு இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை நிறைவேற்றியது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்: தி.மு.க ஆட்சியில் சென்னை மேடவாக்கத்தில் 40 ஏக்கர் நிலத்தில் காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பெண்கள் கல்லூரி காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ரூ.25 இலட்சம் வைப்புநிதியாக வழங்கப்பட்டு காயிதே மில்லத் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டது.
தி.மு.க ஆட்சி காலத்தில் மதுரையில் வக்ஃபு வாரிய கல்லூரிக்கு தி.மு.க அரசு 7 ஏக்கர் நிலம் வழங்கியது. 1998-1999 ஆண்டு இக் கல்லூரிக்கு 5 கோடியே 95 லட்ச ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டது. பாளையங் கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கு திமுக அரசு 32 ஏக்கர் நிலம் வழங்கியது.
தி.மு.க ஆட்சியில் சிறுபான்மையினர் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11,307 ஆசிரியர் பணியிடங்களையும் 650 ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் நிரப்புவதற்கு ரூ.330 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இடஒதுக்கீடு : தி.மு.க ஆட்சி காலத்தில் 1972 ஆம் ஆண்டு தமிழ் பேசும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. உருது பேசும் முஸ்லிம்கள் 1973 ஆம் ஆண்டு பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டன. அதற்காக இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டன. பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கிட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு தி.மு.க அரசால் வழங்கப்பட்டது.
சிறுபான்மையினர் நல ஆணையம்: தி.மு.க ஆட்சியில் சிறுபான்மையினர் நல ஆணையம் 13-2-1989 அன்று அமைக்கப்பட்டது. 1996- 2001 மற்றும் 2006-2011 ஆகிய தி.மு.க ஆட்சி காலங்களில் சிறுபான்மையினர் நல ஆணையம் நன்கு செய்யப்பட்டது.
சிறுபான்மையிர் சமூக சீர்திருத்தத் துறை: தி.மு.க ஆட்சியில் 25 10 1999 அன்று சிறுபான்மையினர் சமூக சீர்திருத்தத் துறை உருவாக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் 2007 2008 முதல் ரூ 18 கோடியே 53 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் ஏழை சிறுபான்மை சமூக மாணவர்கள் 7,090 பேர் பயனடைந்தனர். 2009-2010 ஆம் ஆண்டில் 1,54264 சிறுபான்மை மாணவர்களுக்கு ரூ 18 கோடியே 90 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. 2010- 2011ஆம் ஆண்டில் 2,42,300 சிறுபான்மை மாணவர்களுக்கு ரூ 28 கோடியே 62 லட்சம் அரசு நிதி உதவி வழங்கப்பட்டது.
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் : தி.மு.க ஆட்சியில் 1-7-1999 அன்று சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் உருவாக்கப்பட்டது. குறுகிய காலத்தில் அந்த அமைப்பு மூலம் 31-10-2000 வரை 591 சிறுபான்மையிருக்கு ரூ.2 கோடியே 51 இலட்சம் கடனாக வழங்கப்பட்டது.
சிறுபான்மையினர் நல இயக்குனரகம்: தி.மு.க ஆட்சியில் 6-4-2007 அன்று சிறுபான்மையினர் நல இயக்குனரகம் தோற்றுவிக்கப்பட்டது.
சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித்தொகை: உருது மொழியைப் பாடமாகப் பயின்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2007- 2008 கல்வி ஆண்டில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 12 சிறுபான்மை சமூக மாணவ-மாணவியர்களுக்கு ரூ 21,000 மற்றும் 2008-2009 கல்வி கல்வி ஆண்டில் 13 மாணவர்களுக்கு ரூ. 22,500 வழங்கப்பட்டது.
சிறுபான்மை மாணவியர் விடுதிகள்: திருச்சி, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தி.மு.க ஆட்சியில் 2008- 2009 கல்வியாண்டில் ரூபாய் 35,18,180 செலவில் இஸ்லாமிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதிகள் துவங்கப்பட்டன. விடுதிகளில் மாணவியர்களுக்கு கணினி வசதிகளும் செய்து தரப்பட்டன.
ஹஜ் மானியம் : தமிழ்நாடு ஹஜ் குழுவிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நிர்வாக மானியம் ரூ.5 லட்சம் என்பது தி.மு.க ஆட்சியில் 1998- 1999ல் ஏழு லட்சமாக உயர்த்தப்பட்டது. 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு விண்ணப்பிக்க ஹஜ் புனிதப் பயணிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன.
2006-2011 தி.மு.க ஆட்சியில் ஹஜ் நிர்வாக செலவுகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்பட்டது. ஹஜ் பயண செலவிற்கு மேலும் ரூபாய் 42 லட்சத்து 95 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிதி அல்லாது ஹஜ் நிர்வாக செலவுகளுக்காக தமிழ்நாடு அரசு மேலும் 30 லட்சம் வழங்கியது.
வக்ஃபு வாரியம் : வக்ஃபு வாரியம் நன்கு செயல்பட தி.மு.க அரசு துணை நின்றது. இஸ்லாமிய சமூதாயத்திற்கு சொந்தமான பொது சொத்துகளை பராமரிப்பதற்காக வக்ஃபு வாரியத்திற்கு தி.மு.க அரசு நிதி வழங்கியது
உலமாக்களுக்கு ஓய்வு ஊதியம் : தி.மு.க ஆட்சி காலத்தில் தான் உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ரூ.400 ஆக இருந்த இந்த ஓய்வூதியம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1996-1997இல் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டது. ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையும் 2,200 ஆக உயர்ந்தது. இந்த ஓய்வூதியத் திட்டம் தர்காக்களில் பணிபுரிபவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. மீண்டும் தி.மு.க ஆட்சியில் 2007-2008 இந்த உலமாக்களின் ஓய்வூதியம் ரூ.2200 லிருந்து ரூ.2400 ஆக உயர்த்தப்பட்டது.
மிலாத் விடுமுறை : முஸ்லிம்களின் இறைத் தூதரான முகமது நபிகளின் பிறந்தநாள் தி.மு.க ஆட்சியில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது
உருது மொழி அகடெமி : தமிழ்நாட்டில் உருது பேசும் முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க அரசு 21-7-2000 அன்று உருது அகடமியைத் தொடங்கி வைத்தது. இந்த அமைப்பிற்கு அரசு ரூ.15 லட்சம் வைப்பு நிதியாக வழங்கியது.
தி.மு.க ஆட்சியில் அரசு அலுவலகங்களில் சிறுபான்மையினருக்கு வழிபாட்டு அறைகள் ஒதுக்கப்பட்டன. சிறுபான்மை இளைஞர்களுக்கு ஆட்டோ வாங்க தி.மு.க ஆட்சியில் கடனுதவி வழங்கப்பட்டது. இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது.
தி.மு.க ஆட்சியில் 2007 முதல் கணவனால் கைவிடப்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கு உதவிட மாவட்ட ஆட்சியரைத் தலைவராக கொண்ட முஸ்லீம் மகளிர் சங்கங்கள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திற்கு தலா ரூ.30 இலட்சம் அரசு நிதி வழங்கப்பட்டது.
மதமாற்ற தடைச் சட்டம் நீக்கம் : அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு கிறிஸ்தவர்கள் பெரும் பிரச்சனையாக கருதிய மதமாற்றத் தடைச் சட்டம் தி.மு.க ஆட்சியில் திரும்பப் பெறப்பட்டது.
அன்னை தெரசா நூற்றாண்டு விழா : இந்தியாவிலேயே முதன்முதலாக அன்னை தெரேசா அவர்களின் நூற்றாண்டு விழாவை தி.மு.க அரசு சிறப்பாக கொண்டாடியது. அன்னை தெரசா மகளிர் வளாகம்: பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்படும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அன்னை தெரசா மகளிர் வளாகம் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது.
கல்லறைத் தோட்டம்: கிறிஸ்தவர்களுக்கு சென்னையில் போதுமான அளவு கல்லறை வசதிகள் இல்லை என தமிழ்நாடு அரசு துணை முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கை ஏற்கபட்டு சென்னையில் வேளச்சேரி மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் சென்னை மாநகராட்சி ஒப்புதலுடன் வழங்கப்பட்டு கிறிஸ்தவர்களுக்கு கல்லறை வசதிகள் செய்து தரப்பட்டன.
சென்னை நகரில் தொழில்நுட்பப் பூங்கா உள்ள பகுதியில் பல கோடி மதிப்புள்ள நான்கு ஏக்கர் நிலம் காரப்பாக்கம் பகுதியில் கிறிஸ்தவர்களின் கல்லறைக்காக மாண்புமிகு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையின்படி கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டது. பல்லாவரம், விழுப்புரம்,நாமக்கல் போன்ற பகுதிகளில் கிறிஸ்தவர்க்கு தேவையான கல்லறைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேபோல் தி.மு.க ஆட்சியில் பல பகுதியில் இஸ்லாம் மையவாடிகள் ஏற்படுத்தப்பட்டன .
புனித தோமையர் மலை : இயேசு பெருமானின் முக்கிய சீடர்களில் ஒருவரான தோமையர் சென்னைக்கு வந்து வாழ்ந்து மறைந்த மலை பரங்கிமலை என அழைக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் அந்த மலைக்கு புனித தோமையர் மலை என பெயரிடப்பட்டது.
தி.மு.க ஆட்சியில் சென்னை புனித தோமையர் மலையில் உள்ள திருத்தலத்தை தேசிய திருத்தலமாக அறிவிப்பதற்காக 08.01.2011 அன்று நடந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்து. அதற்காக தி.மு.க அரசு ரூ.50 லட்சம் நிதி வழங்கியது.
வீரமாமுனிவருக்கு மரியாதை : தி.மு..க ஆட்சியில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் கிறிஸ்தவ தமிழ் அறிஞரான வீரமாமுனிவருக்கு சிலை அமைக்கப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாள் அரசு விழாவாககொண்டாடப்படும் என தமிழக அரசு 08.11.2009 அன்று அறிவித்து அதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அவரது பிறந்த நாளில் தமிழ்நாடு அரசு சார்பாக தமிழக அமைச்சர்கள் வீரமாமுனிவர் சிலைக்கு மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செய்து வருகின்றனர்.
கால்டுவெல் மணிமண்டபம் : திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், திருநெல்வேலியின் அரசியல் வரலாறு போன்ற பல நூல்களை எழுதிய திராவிட மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இளையன்குடியில் அவர் வாழ்ந்த இல்லத்தை தி.மு.க அரசு மணிமண்டபமாக மாற்றி அவருக்கு பெருமை சேர்த்தது.
சிறுபான்மையினர் உதவி குழு : சிறுபான்மையினர் உதவி குழு மூலம் முன்பு சிறுபான்மை சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு சிறு கடனாக வழங்கப்பட்ட நிதி உதவி ரூ.10,000 என்பது தி.மு.க ஆட்சியில் ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. 2006-2011 தி.மு.க ஆட்சியில் இதற்காக ரூ.50 கோடி நிதி வழங்கப்பட்டது.
கிறிஸ்துவ சிறு மலர் பள்ளி : கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த சகோதரிகள் நடத்துகின்ற சிறு மலர் பள்ளிக்குத் தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தலைவர் தளபதி அவர்கள் தொடர்ந்து சென்று அக்குழந்தைகளுக்கு ஆதரவு அளித்தும் அப்பள்ளிக்கு பெருமை சேர்த்தும் வருகிறார்.