தி.மு.க

“மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு கலைஞர் அரசு செயல்படுத்திய திட்டங்கள்” : மகுடம் சூடிய தி.மு.க-11

மாற்றுத்திறனாளிகள் முன்னேற தி.மு.க அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி அவர்களுக்கு ஏற்றமளித்தது.

“மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு கலைஞர் அரசு செயல்படுத்திய திட்டங்கள்” : மகுடம் சூடிய தி.மு.க-11
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1967-69, 1969-71, 1971-76, 1989-91, 1996-2001, 2006-2011 ஆகிய ஆறுமுறை அமைந்த தி.மு.க ஆட்சிக் காலங்களில் சமுதாயத்தில் பல பிரிவினர்களின் முன்னேற்றத்திற்கு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது போல் மாற்றுத்திறனாளிகள் நலனை மேம்படுத்த பல சட்டங்கள் இயற்றப்பட்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

1972 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் நலத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1969-76 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 1,485 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. 1974ம் ஆண்டு ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள், மோட்டார் பொருத்தப்படாத மூன்று சக்கர வண்டிகள், ஊன்றுகோல்கள் ஆகிய பொருட்களுக்கு வரிகள் நீக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் செய்து வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

“மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு கலைஞர் அரசு செயல்படுத்திய திட்டங்கள்” : மகுடம் சூடிய தி.மு.க-11

1975-1976 ஆம் ஆண்டு பார்வையற்ற மாணவர்களுக்கு சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டன. மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை ரூ.200லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 50,000 மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றனர்.

காதுகேளாத, வாய் பேசாதவர்களை மணந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு கை அல்லது கால் இழந்தோரை திருமணம் செய்து கொள்ளும் ஊனமுற்றோர்களுக்கும் வழங்கப்பட்ட நிதி உதவி ரூ.5,000 என்பது ரூ.7,000 என 2000-2001ஆம் ஆண்டு உயர்த்தி வழங்கப்பட்டது. ஊனமுற்றறோரை ஊனமில்லாதவர் திருமணம் செய்துக்கொண்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட திருமண உதவித் தொகை ரூ.20,000 என உயர்த்தப்பட்டது. இதனால், 1,170 தம்பதியர்களுக்கு 2,34 இலட்சம் நிதி வழங்கப்பட்டது.

2006-2011 ஆண்டு தி.மு.க ஆட்சியில் சென்னை முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற 70,660 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.155 கோடி நிதி வழங்கப்பட்டது.

ஆசிய கண்டத்திலேயே முதன்முதலாக தேசிய உடல் மாற்றுத்திறனாளி திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்திராகாந்தி மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 64 வயது வரைலான 80 சதவீத உடல் மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றனர். இவர்களுக்கு ரூ.500 மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆதரவற்ற வாய்பேச முடியாத ஏழைகளுக்காக 19.03.2010 அன்று சிறிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. 24.04.2009 அன்று தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் அமைத்தது. தமிழ்நாடு அரசு ஊனமுற்றோர் நலத்துறை 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

“மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு கலைஞர் அரசு செயல்படுத்திய திட்டங்கள்” : மகுடம் சூடிய தி.மு.க-11

1972 ஆம் ஆண்டு படித்த பார்வையற்ற இளைஞர்களுக்கு பல நல திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. 1974-75 ஆம் ஆண்டு 8 அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் 335 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து அரசு போக்குவரத்துத் துறை காதி, கதர் மற்றும் டான்சி ஆகிய அரசு நிறுவனத்திங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

1974-75ல் சுமார் 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 1989-90 திமுக ஆட்சிக்காலத்தில் 7,39,000 முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டது.1975-76ல் கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர், சிதம்பரம், நாகர்கோவிலில் பார்வையற்றோர் பள்ளிகள் திறக்கப்பட்டன. படித்த நான்கு பார்வையற்றோர் அரசு கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாக 1974 - ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டன.

1974-75ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைசெய்யும் 7 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.1,72,000/- நிதி வழங்கப்பட்டது. 1974-75 ஆம் ஆண்டு மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக இரண்டு சிறப்பு வேலைவாய்ப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

அதிகமான அளவில் மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கும் திட்டம் 1971 முதல் செயல்படுத்தப் பட்டது. சமூக நலத்துறை மூலம் 1971-72ம் ஆண்டு ஊனமுற்றோர் நலன் மேம்பாட்டிற்கு 14 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டன. காது கேளாத, வாய்பேசாத 6 முதல் 16 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சிறப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஊனமுற்றோர் திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் நிருவப்பட்டது. அதில் 16 முதல் 50 வயதிலான மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சிகள் அளித்து வேலைவாய்புகள் உருவாக்கி தரப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் பயிற்சி பள்ளிகள் மிகச் சிறப்பான சுய வேலைவாய்ப்பு திட்டமாக செயல்பட்டு ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தன.

“மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு கலைஞர் அரசு செயல்படுத்திய திட்டங்கள்” : மகுடம் சூடிய தி.மு.க-11

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இலவச கல்வி வழங்கப்பட்டது. ஊனமுற்ற மாணவர்கள் அரசு உதவி பெருவதற்கு அவர்களுடைய பெற்றோர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமாண வரம்பு நீக்கப்பட்டது. ஊனமுற்றோர் என்பதற்கு பதிலாக மாற்றுத் திறனாளிகள் என்று கௌவரத்துடன் அழைத்து அவர்களை பெருமைப்படுத்தினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலியுற்றோர்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 70,000 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட 3348 சுய உதவிகுழுக்கள் வங்கிகளில் இணைக்கப்பட்டு சுமார் ரூ.18.70 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது. 94,496 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு மாநில அரசு நிதி உதவிகள் வழங்கியது. கடுமையாக ஊனமுற்ற 4,290 நபர்களுக்கு பராமரிப்பு உதவியும் 20,833 வயதானவர்களுக்கு முதியோர் உதவித் தொகையும் அரசால் வழங்கப்பட்டன. 9,727 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.62 கோடி செலவில் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு இரயில் பயணக் கட்டண சலுகைகள் வழங்குவது போல் தி.மு.க ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டது. அவர்கள் நான்கில் ஒரு பங்கு அதாவது கால் சதவீதம் பேருந்து கட்டணம் செலுத்தி பேருந்தில் செய்யும் வசதி செய்து தரப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வேண்டிய மூன்று சக்கர வாகனங்கள் போன்ற உதவி உபகரணங்கள் வாங்குவதற்கும் சிறு தொழில் தொடங்குவதற்கும் மானிய கடன் வழங்கப்பட்டது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் மிக அதிகமாக மாநில அளவில் தர வரிசைப் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இடம் பிடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி செலவுகள் அனைத்தையும் மாநில அரசு ஏற்றுக் கொண்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திராகாந்தி ஊனமுற்றோர் தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் முன்னேற தி.மு.க அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி அவர்களுக்கு ஏற்றமளித்தது.

Related Stories

Related Stories